ETV Bharat / city

தீரன் சின்னமலை நினைவு தினம் - எடப்பாடி பழனிசாமி மரியாதை

author img

By

Published : Aug 3, 2021, 11:14 AM IST

Updated : Aug 3, 2021, 11:23 AM IST

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 217 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி, சங்ககிரியில் உள்ள அவரின் நினைவிடத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

http://10.10.50.85//tamil-nadu/03-August-2021/tn-slm-01-theeran-chinnamalai-vis-pic-script-tn10057_03082021101933_0308f_1627966173_689.jpg

சங்ககிரி : இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற விடுதலை போராட்டத்தில் தீரமுடன் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் தீர்த்தகிரி என்ற இயற்பெயர் கொண்ட தீரன் சின்னமலை 1756 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி காங்கேயம் அருகே மேலப்பாளையத்தில் பிறந்தார்.

கிழக்கிந்திய கம்பெனி படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க பல்வேறு கட்டங்களாக போர் புரிந்து வந்த இவர், சூழ்ச்சி மூலம் கைது செய்யப்பட்டு சங்ககிரி கோட்டையில் 1805 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.

தீரன் சின்னமலை நினைவு தினம்
தீரன் சின்னமலை நினைவு தினம்

அமைச்சர்கள் மரியாதை

இந்நிலையில் அவரின் நினைவு தினம் (ஆகஸ்ட் 3) இன்று அனுசரிக்கப்படுகிறது.
சங்ககிரி மலைக்கோட்டையில் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில், தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் மதி வேந்தன் , சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர் .

தீரன் சின்னமலை நினைவு தினம்
தீரன் சின்னமலை நினைவு தினம்
அதனைத் தொடர்ந்து சேலம்- ஈரோடு பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு மணிமண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள சின்னமலையின் உருவப் படத்திற்கு, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

எடப்பாடி பழனிசாமி மரியாதை

அதே போல் நினைவு மண்டபத்தில் தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தீரன் சின்னமலை நினைவு தினம் - எடப்பாடி பழனிசாமி மரியாதை

இதையும் படிங்க :குடியரசுத் தலைவர் வருகை: கோவையில் ட்ரோன் பறக்கத் தடை

Last Updated : Aug 3, 2021, 11:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.