முதலமைச்சர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி மற்றும் சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,"நாடாளுமன்றத் தேர்தல் போல் அதிமுகவையும், மோடியையும் வரும் சட்டமன்ற தேர்தலிலும் ஓட ஓட விரட்ட வேண்டும். மோடியை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரே தலைவர் ஸ்டாலின், ஒரே கட்சி திமுக தான்.
கடந்த 4 ஆண்டுகளில் தனது தொகுதியிலேயே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தராத திறமையற்ற திராணியற்ற முதலமைச்சர் தான் பழனிசாமி. மத்திய அரசுடன் இணைந்து தமிழக மக்களுக்கு பல்வேறு துரோகங்களை இழைத்த எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி அமைந்தவுடன் சிறைக்கு செல்வது உறுதி. அதற்கு இங்கு கூடியிருக்கும் நீங்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, எடப்பாடியில் சம்பத்குமாரை வெற்றிபெறச் செய்ய வேண்டும். விரைவில் ஜெயிலுக்கு போகப்போகும் பழனிசாமிக்கு வாக்களித்துவிடாதீர்கள்” என்றார்.
இதையும் படிங்க: 'ஒரு நிமிடம்கூட வீணடிக்காமல் நாட்டை உயர்த்த உழைத்துவரும் மோடி!'