தமிழ்நாட்டில் நீட் தேர்வே கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. அதிமுகவில் மட்டுமல்ல வேட்பாளர் பட்டியல் பிரச்சினை அனைத்து கட்சிகளிலும் உள்ளது. இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்.
புதுச்சேரியில் அதிமுக, பாஜக இடையே சுமூகமான பேச்சுவார்த்தை தொடர்ந்துவருகிறது. புதிய தமிழகம் கட்சியை பொருத்தவரை ஏற்கனவே அது கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறிவிட்டது. தேமுதிக விலகலால் எந்தப் பாதிப்பும் இல்லை.
கூட்டணியிலிருந்து வெளியே சென்றுவிட்டு ஒரு கட்சி மீது பழி சுமத்துவது தவறு. தேமுதிகவுக்கு உரிய மரியாதை கொடுத்தோம். வாக்கு வங்கிக்கு ஏற்றவாறு பேச்சுவார்த்தை நடந்தது. தேர்தல் அறிக்கை அல்ல, மக்கள் நினைப்பதை தேர்தலுக்கு முன்னரே நடத்தி காட்டியது அதிமுக அரசாங்கம்.
நாங்கள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி அமல்படுத்தியுள்ளோம். இதெல்லாம் தேர்தலுக்காக அல்ல. அதிகன மழை, வறட்சி, புயல், வெள்ளம் வந்தபோது விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதனடிப்படையில் நாங்கள் கூட்டுறவு கடன் மற்றும் விவசாயக் கடனை ரத்து செய்தோம்.
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் கருத்துக் கணிப்புகளை மீறி நாங்கள் வெற்றி பெற்றோம். தேர்தல் அறிக்கையை பாருங்கள்.. நாங்கள் என்னென்ன அறிவிக்க போகிறோம் என்பது தெரியவரும். அதிமுக சட்டப்பேரவை தொகுதியில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறும். மக்கள் வாக்களிப்பார்கள். மக்களே நீதிபதிகள். அவர்கள் சரியான தொகுதியை எங்களுக்கு கொடுப்பார்கள்” என்றார்.
இதையும் படிங்க: 2021 சட்டப்பேரவை தேர்தல்; நீட் தேர்வு ரத்து, திருக்குறள் தேசிய நூல், கலைஞர் உணவகம்- திமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்!