ETV Bharat / city

உத்தமசோழபுரத்தில் புதிய இணையவழி பயிற்சி! - சேலம் மாவட்டச் செய்திகள்

சேலம்: உத்தமசோழபுரத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அமெரிக்கன் இந்தியா பவுண்டேசன் இணைந்து நடத்தும் ‘STEM intervention through Digital Equilizer programme’ இன்று காலை இணையவழியில் தொடங்கப்பட்டது.

சேலம்
சேலம்
author img

By

Published : Nov 12, 2020, 5:07 PM IST

2015ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் சிறப்பாகச் செயல்பட்டு பின்னர் மீனவ கிராமங்களில் உள்ள மாணவர்களின் கல்வியை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல பல்வேறு நுட்ப முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன.

அரசு சாரா அகில உலக நிறுவனமான அமெரிக்கன் இந்தியா ஃபவுண்டேஷன் கிராமப்புற மாணவர்களின் கல்வியை மேம்படுத்த, சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து இந்நிகழ்வை தொடங்கியுள்ளனர்.

அமெரிக்கன் இந்தியா பவுண்டேனின் மாநிலத் திட்ட ஒருங்கிணைப்பாளர் திவ்யமுரளி வரவேற்புரை ஆற்றினார்.

சேலம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் மு. செல்வம் இணையவழி பயிற்சியைத் தொடங்கிவைத்தார். முதல் கட்டமாக சேலம் மாவட்டத்திலுள்ள 15 பள்ளிகளில் Digital Equilizer Programme (DEP) செயல்படுத்தப்பட உள்ளது. இந்த இணையவழி பயிற்சியானது 15 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், படிக்கும் மாணவர்களுக்கும் அளிக்கப்பட இருக்கிறது.

முதலில் 15 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையவழியில் பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. மேலும் இப்பயிற்சியில் ஆசிரியர்கள் எவ்வாறு தகவல் தொழில் நுட்பத்தை பாடப்பொருளோடு இணைத்து கற்பித்தல் செயல்பாடு அமைப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.