சேலம் மாநகராட்சி எல்லையை ஒட்டிய சன்னியாசி குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட காட்டு மரக்கட்டை பகுதியில் சுமார் 70 குடும்பத்தினர் பல ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர்.
இவர்கள் குடியிருப்பு பகுதியை ஒட்டிய இடத்தில் பொன்னுசாமி என்ற தனிநபரின் பட்டா நிலம் உள்ளது. பொன்னுசாமியின் நிலத்தின் ஒரு பகுதியை அங்கு வசித்தவர்கள் வழித்தடமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
பொன்னுசாமி தனக்கு சொந்தமான நிலத்தில் சுற்றுச்சுவர் எழுப்பி வீடு கட்டும் பணியை தற்போது மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக தாங்கள் பயன்படுத்தி வரும் பாதையை மறைத்து சுற்றுச்சுவர் எழுப்புவதற்கு காட்டு மரக்கட்டை பகுதி வாழ் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளி மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட வருவாய் துறையினரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியதை தொடர்ந்து போலீசார் வற்புறுத்தலின் பேரில் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நடிகர் ரஜினி பேசியது அழகல்ல' - நெல்லை முபாரக்