ETV Bharat / city

Cylinder Blast: சிலிண்டர் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

Cylinder Blast : சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

சிலிண்டர் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
சிலிண்டர் வெடித்து விபத்து
author img

By

Published : Nov 23, 2021, 3:07 PM IST

Updated : Nov 23, 2021, 3:20 PM IST

சேலம்: கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி. இவரது தாயார் ராஜலட்சுமி(80) இன்று காலை வழக்கம்போல் சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்த போது எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து சிதறியது .

வீடுகள் தரைமட்டம்

இந்த விபத்தில் அருகில் இருந்த வீடும், மேல்தளத்தில் இருந்த இரு குடியிருப்பு உள்ளிட்ட 4 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும், கட்டடத்தின் பாகங்கள் சிதறியதில் பால் வியாபாரி ஒருவர் மீதும், எதிர் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த தனலட்சுமி என்பவரின் மீதும் விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் சுதர்சன், கோபால், சுப்பிரமணி, தனலட்சுமி, நாக சுதா, இந்திராணி, மோகன்ராஜ், கோபி, லோகேஷ், ராஜலட்சுமி , வெங்கடராஜன்
ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். Cylinder Blast

உயிரிழப்பு

மீட்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 80 வயதான ராஜலட்சுமிமருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார்.

மேலும் மூவர் பலி

மேலும் தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வரும் பத்மநாபன் அவரது மனைவி தேவி, கார்த்திக் ராம் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். மூன்றரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு முருகன் என்பவரது 10 வயது மகள் பூஜாஸ்ரீ என்ற சிறுமி காயத்துடன் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் முடிவில் விபத்துக்கான முழு விவரம் தெரியவரும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Velacherry Accident CCTV: பேருந்து மோதி பெண் உயிரிழப்பு - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

Last Updated : Nov 23, 2021, 3:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.