ஏற்காடு மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில், சுமார் 36 ஹெக்டேர் பரப்பளவில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. சேலம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் பொழுது போக்கு தளங்களில் குரும்பப்பட்டி பூங்கா முக்கிய இடம் வகிக்கிறது. இங்கு பல்வேறு வகையான குரங்குகள், புள்ளி மான்கள், வெள்ளை மயில், வெளிநாட்டுப் பறவைகள் உள்ளிட்டவை இருக்கிறது. இதனை நாள்தோறும் திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.
இதனிடையே குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவில் வன பாதுகாப்பு அலுவலர்கள் மரங்களை வெட்டுவதாகத் தகவல் வெளியானது.
அரசு வனப் பூங்காவில் மரங்களை வெட்டும் அலுவலர்களைக் கண்டித்துப் பேசிய சூழலியல் போராளி பியூஷ் மானுஷ், ‘குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவில் அரிய வகை மரங்களை வன பாதுகாப்பு அதிகாரிகளே வெட்டுவது அதிர்ச்சி அளிக்கிறது. காரணம் ஏதும் இல்லாமல் இப்படி மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது கண்டனத்துக்குரியது’ எனக் கூறினார்.