ETV Bharat / city

கரோனா இருக்கோ இல்லையோ 10 நாள் கட்டாயம் ட்ரீட்மெண்ட் - சேலம் தனியார் மருத்துவமனைகள் மீது குற்றச்சாட்டு!

சேலம் : கரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை செய்வதற்காக தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் அனைத்து நபர்களுக்கும், தொற்று பாதிப்புகள் இருந்தாலும், இல்லாவிடினும் அவர்கள் கட்டாயம் 10 நாள்கள் வரை தங்கவைக்கப்பட்டு சிகிச்சைப் பெற வற்புறுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

corona_test_
corona_test_
author img

By

Published : Sep 20, 2020, 7:30 AM IST

கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, நாட்டில் மகாராஷ்டிரா, ஆந்திராவிற்கு அடுத்தபடியாக தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. மாநிலத்தில் சென்னை, அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மட்டும் அதிகரித்து வந்த கரோனா தொற்று பாதிப்பு, சில வாரங்களாக பிற மாவட்டங்களிலும் அதிகரித்து வருகிறது.

அதில், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட அளவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு தனியார் மருத்துவமனைகளும் ஆய்வகங்களுமே காரணம் எனப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் எஸ்.கே.எஸ் மருத்துவமனை, சண்முகா மருத்துவமனை, விநாயகா மிஷன் மருத்துவமனை, கோகுலம் மருத்துவமனை, உள்ளிட்ட 11 தனியார் மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அரசு மருத்துவமனை தவிர நான்கு தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் அனுமதி வழங்கியுள்ளது.

இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு சுமார் ஐந்தாயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தற்போது இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களில் சுமார் 16 ஆயிரம் பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், சேலம் நான்கு ரோடு, ஐந்து ரோடு, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும்தனியார் ஆய்வகங்களில் நடத்தப்படும் கரோனா பரிசோதனையில் குளறுபடிகள் நடப்பதாகப் புகார் எழுந்துள்ளது. தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனையில் வெளிவரும் முடிவுகளில் திருத்தம் செய்யப்படுவதாகவும், தொற்றால் பாதிக்கப்படாதவர்களும் பாதிக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்படுவதாகவும், வெளிவரும் முடிவுகளில் பெரும்பான்மையானவை திருத்தப்படுவதாகவும் பல தரப்பினரிடமிருந்து அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது குறித்து ஈடிவி பாரத் நிறுவனம் கள ஆய்வு செய்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் பிரபாகரன்,

"சேலம், சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் நோய் தொற்றுப் பரிசோதனை முடிவுகளில் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று தெரிந்தாலும் அவர்கள் பத்து நாட்கள் மருத்துவமனையிலேயே கட்டாயமாகத் தங்க வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அது மட்டுமின்றி, சிகிச்சைக்காக நாளொன்றுக்கு எட்டாயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளை குறித்து பேசிய, தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத்தின் தலைவர் ஜெயசீலன், "ஒவ்வொரு மருத்துவமனையையும் மாவட்ட நிர்வாகம் முறையாக கண்காணித்து நேரடி கள ஆய்வு செய்ய வேண்டும். இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனியார் மருத்துவமனை கட்டணக் கொள்ளையிலிருந்து பாதுகாக்க முடியும்" என்றார்.

கரோனா பொது முடக்கத்தை தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. தனியார் மருத்துவமனைகள், தனியார் ஆய்வகங்கள் இணைந்து காப்பீட்டுத் தொகையை நோயாளிகளிடமிருந்து பெறுவதில் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனைக்காக செல்லும் நபர்கள் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றாலும், அச்சத்தை ஏற்படுத்தி அவர்களிடம் காப்பீட்டுத் தொகைகளை பெற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் தனியார் ஆய்வகங்களில் சோதனை மேற்கொள்ளும் பலருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது..

தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சியின் தலைவர் பூமொழி கூறுகையில், "சேலம் மாவட்டத்தில் பெரிய அளவில் கரோனா மோசடி நடைபெறுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. ஏழை, எளிய மக்கள் அவசரத்திற்கு தனியார் மருத்துவமனைகளில் நாடினால் அவர்களிடமிருந்து காப்பீட்டு அட்டையைப் பயன்படுத்தி சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் வரை பெறப்படுவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர். தனியார் மரு்ததுவமனை, ஆய்வகங்களின் இந்த நடவடிக்கையைக் கட்டுப்படுத்த அரசு முறையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

தனியார் மருத்துவமனை, ஆய்வகங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராமனிடம் பலர் புகார் தெரிவித்துள்ளனர். இந்தப் புகார்களின் பேரில், தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை குளறுபடிகளைத் தடுத்திட உரிய ஆய்வு நடத்தும்படி சுகாதாரத் துறையினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கரோனா பரிசோதனை முறைகேடுகள் குறித்துத் தெரிய வந்தால் தொடர்புடைய தனியார் ஆய்வகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் முன்னதாகத் தெரிவித்தார்.

சேலத்தில் தினமும் சுமார் நான்காயிரம் பேருக்கு அதிகமாக கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மொத்தம் எடுக்கப்படும் சளி மாதிரிகளில் 20 சதவிகிதம் பேருக்கு கரோனா தொற்று பாதிப்புகள் உறுதி செய்யப்படுகின்றன. இந்த எண்ணிக்கை, தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட பிறகே அதிகரித்துள்ளது

தனியார் ஆய்வக முடிவுகளை, மாவட்ட சுகாதாரத் துறைக்கும் தெரிவிக்க வேண்டும் . இதனால், பரிசோதனை முடிவுகளில் குளறுபடிகள் ஏற்படுவது தடுக்கப்படும். அதுமட்டுமின்றி, மக்களின் அச்சத்தைப் போக்க கரோனா பரிசோதனை முடிவுகளை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வெளியிடவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.