சேலம் மாவட்டத்தில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. அதன்படி, ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதி வாழ் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் 2011 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகையும், 74 பயனாளிகளுக்கு விதவை உதவித் தொகையும் வழங்கப்பட்டது.
கணவனால் கைவிடப்பட்ட 33 பயனாளிகளுக்கு உதவித்தொகையும், முதிர்கன்னி ஓய்வூதியம் ஒன்பது பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உதவித்தொகை 60 பயனாளிகளுக்கும், நத்தம் வீட்டுமனை பட்டா 169 பயனாளிகளுக்கும், பட்டா மாறுதல் 76 பயனாளிகளுக்கும், பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 17 பயனாளிகளுக்குத் தையல் இயந்திரங்களும் அளிக்கப்பட்டது.
இதன் மூலம் மொத்தம் 3076 பயனாளிகள் பயன்பெறுகின்றனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்காக ஆண்டுக்கு 4 கோடியே 31 லட்சத்து 81 ஆயிரத்து 543 தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.