தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி, சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல் அலுவலர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
முன்னதாக, சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி , வீரபாண்டி உள்ளிட்ட 12 ஊராட்சி ஒன்றியங்களில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து சேலம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்றியக்குழு ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக, அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், சேலம் அடுத்த வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.