சேலத்தில் நேற்று ஈரடுக்கு மேம்பாலத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் பேசுகையில், "சேலம் மாவட்டத்தில் 8 வழி சாலை திட்டமானது நல்லதொரு திட்டம். தொழில் வளம் பெருகும். ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஒரு சில காரணங்களால், தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
அதனை எல்லாம் சரி செய்து அனைத்து விவசாயிகளையும் சமாதானப்படுத்தி 8 வழி சாலை திட்டம் அமைக்கப்படும். அதற்கான முயற்சியை மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ளும்" என்று கூறியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று சேலம் பூலாவரி, ஆச்சாங்குட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் எட்டு வழிச்சாலை திட்டத்தினால் பாதிக்ககூடிய சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “எந்த ஒரு காலக்கட்டத்திலும் இந்த எட்டு வழி சாலைக்கு நிலத்தை வழங்க மாட்டோம். விவசாயிகளை சமாதானப்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்தும் என்று முதலமைச்சர் கூறுகிறார். ஒரு பிடி மண்ணை கூட இந்தத் திட்டத்திற்காக நாங்கள் தர மாட்டோம்.
'8வழி சாலைகாக ஒரு பிடி மண்ணை கூட தர மாட்டோம்'-விவசாயிகள் ஆவேசம்! தொடர்ந்து முதல்மைச்சர் இதுபோன்று விவசாயிகளை வஞ்சிக்கும் திட்டத்தினைச் செயல்படுத்த துடிப்பது அவரின் லாப நோக்கத்தில்தான். விவசாயியின் மகன் என்றும் விவசாயிகளின் வேதனை எனக்கு தெரியும் என்று சொல்லி வரும் முதலமைச்சர், மிகப்பெரிய இயற்கை வளங்களை அழித்து யாருக்காக இந்த எட்டு வழி சாலை அமைக்கிறார்? சாலை கட்டாயம் விவசாயிகளுக்கான சாலை அல்ல. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே” என்று தெரிவித்தனர்.

சேலம் (08.06.2019):
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து 8 வழி சாலை விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , பேசுகையில் 8 வழி சாலை திட்டம் நல்லதொரு திட்டம் , சேலம் மாவட்டத்தில் தொழில் வளம் பெருகும் , ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் , ஒரு சில காரணங்களால் தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது .
அதனை எல்லாம் சரி செய்து அனைத்து விவசாயிகளையும் சமாதானப்படுத்தி 8 வழி சாலை திட்டம் அமைக்கப்படும் . அதற்கான முயற்சியை மத்திய அரசும் மாநில அரசும் மேற்கொள்ளும் என்று நேற்று கூறியிருந்தார் .
முதலமைச்சரின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து , சேலம் பூலாவரி பகுதியில் எட்டு வழி சாலை திட்டத்தினால் பாதிக்கப்படிம் விவசாயிகள், இன்று தங்களது குடும்பத்தினருடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதேபோல் சேலம் ஆச்சாங்குட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 8 வழி சாலை திட்டத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர் .
இந்த போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து விவசாயிகள் கூறுகையில் , “ எந்த ஒரு காலகட்டத்திலும் இந்த எட்டு வழி சாலைக்கு நிலத்தை வழங்க மாட்டோம் .
விவசாயிகளை சமாதனப்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசு என்று கூறினார் முதலமைச்சர். எந்த ஒரு காலகட்டத்திலும் எத்தனை கோடி கொடுத்தாலும் ஒரு பிடி மண்ணை கூட இந்தத் திட்டத்திற்காக நாங்கள் தர மாட்டோம் .
தொடர்ந்து முதல்வர் இதுபோன்ற விவசாயிகளை வஞ்சிக்கும் திட்டத்தை செயல்படுத்த துடிப்பது அவரின் லாப நோக்கத்தில் தான் . இந்த எட்டு வழி சாலை திட்டத்தினால் பல லட்சம் கோடி அவருக்கு லாபம் கிடைக்கும் . இந்த நோக்கில் இந்த சாலை அமைக்க முயற்சிக்கிறார் .
வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் ஆனாலும் சரி அல்லது சட்டமன்ற தேர்தல் ஆனாலும் சரி விவசாயிகளை வஞ்சிக்கும் இந்த எடப்பாடி அரசுக்கு தக்க பாடம் சேலம் மாவட்டம் மட்டுமல்லாமல் இந்த எட்டு வழி சாலை திட்டத்தினால் பாதிக்கப்படும் அனைத்து மாவட்ட விவசாயிகளும் இவருக்கு பதிலடி கொடுப்பார்கள் .
தமிழகத்தின் முதலமைச்சர் தொடர்ந்து உண்மைக்கு மாறான பொய் பிரச்சாரங்களை செய்து வருகிறார். இந்த எட்டு வழி சாலை திட்டத்தில் மட்டும் பொய்யை மட்டுமே தொடர்ந்து பேசி வருகிறார் .
விவசாயியின் மகன் என்றும் விவசாயிகளின் வேதனை எனக்கு தெரியும் என்று சொல்லி வரும் இந்த முதலமைச்சர், மிகப்பெரிய இயற்கை வளங்களை அழித்து யாருக்காக இந்த எட்டு வழி சாலை அமைக்கிறார்?
இவர் அமைக்கப்படும் சாலை கட்டாயம் விவசாயிகளுக்கான சாலை அல்ல . கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டுமே அமைக்கப்படும் சாலைதான் எட்டு வழி சாலை .” என்று தெரிவித்தனர்.