ETV Bharat / city

உள்ளாட்சி தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது: இயக்குநர் கௌதமன் பேட்டி

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என கிருஷ்ணகிரியில் பேரறிவாளன் சகோதரி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் கௌதமன் கூறினார்.

BJP to contest local government polls You can't even win a single place says director Gowthaman
author img

By

Published : Nov 23, 2019, 11:21 PM IST

கிருஷ்ணகிரியில் பேரறிவாளன் சகோதரி மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் கௌதமன் கலந்து கொண்டார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த கௌதமன், உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட வேண்டும். மறைமுக தேர்தல் நடத்தக் கூடாது, ரகசிய தேர்தலுக்கான அவசர சட்டத்தை யாரை கேட்டு எதற்காக கொண்டு வந்தார்கள் என்பது தெரியவில்லை.

உள்ளாட்சி தேர்தல் மற்றும் மேயர் தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது. அதனால் மறைமுக தேர்தல் மூலம் தில்லு முல்லு செய்து மேயரை குதிரை பேரம் பேசி, மறைமுகமாக பாஜக கட்சியினர் எச்.ராஜா போன்றவர்களை மேயர் மற்றும் துணை மேயர்களாக அமர்த்த பாஜக திட்டம் தீட்டி வருகிறது. அதற்கு அதிமுக துணை போகிறது.

அவசர சட்டத்தை ஒரு மணி நேரத்தில் ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.ஆனால் விரைவில் தண்டனை காலம் முடிந்து வெளிவர இருக்கையில் பல்லாண்டுகளாக நடையாக நடந்து பேரறிவாளன் அம்மா அவர்கள் கால் தேய்ந்து விட்டது.

ஆளுநர் அவசர சட்டம் தொடர்பாக இவ்வளவு சீக்கிரம் முடிவு எடுத்தது போல் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு தொடர்பாக முடிவு எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்றார்.

முன்னதாக பேரறிவாளன் சகோதரியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பேரறிவாளன் அம்மா அற்புதம்மாள், நடிகர் பொன்வண்ணன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இயக்குனர் கவுதமன் பேட்டி
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைக்குச் சென்ற பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க: “சாகர்மாலா திட்டம் மீனவர்களை சாகடித்து மாலை போடும் திட்டம்”

Intro:தமிழகத்தில் நடைப்பெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது கிருஷ்ணகிரியில் பேரறிவாளன் சகோதரியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் கௌதமன் பேட்டி.Body:தமிழகத்தில் நடைப்பெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது கிருஷ்ணகிரியில் பேரறிவாளன் சகோதரியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் கௌதமன் பேட்டி.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துக் கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த  திரைப்பட இயக்குனர்   கௌதமன் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட வேண்டும். மறைமுக தேர்தல் நடத்தக் கூடாது ரகசிய தேர்தலுக்கான அவசர சட்டத்தை யாரை கேட்டு எதற்காக கொண்டு வந்தார்கள் என்பது தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தல் மற்றும்மேயர் தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது. அதனால் மறைமுக தேர்தல் மூலம் தில்லு முல்லு செய்து மேயரை குதிரை பேரம் பேசி மறைமுகமாக பாஜக கட்சியினரை எச்ச ராஜா போன்றவர்களை மேயர் மற்றும் துணை மேயர் களாகமர்த்த திட்டம் பாஜக திட்டம் தீட்டி வருகிறது அதற்கு அதிமுக துணை போகிறது.

அவசர சட்டத்தை ஒரு மணி நேரத்தில் ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.ஆனால் விரைவில் தண்டனை காலம் முடிந்து வெளிவர இருக்கையில் பல்லாண்டுகளாக நடையாக நடந்து பேரறிவாளன் அம்மா அவர்கள் கால் தெரிந்துவிட்டது ஆளுநர் அவசர சட்டம் தொடர்பாக இவ்வளவு சீக்கிரம் முடிவு எடுத்தது போல் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு தொடர்பாக முடிவு எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்று அவர் கூறினார்.

ரஜினியும், கமலும் இந்த மண்ணை அழிக்க வந்த கூட்டத்திற்கு கைக்கூலி ஆட்களாக நிற்பவர்கள்.
உங்களுடைய நடிப்பை மக்கள் ஏற்க மாட்டார்கள்.சேந்து நடித்த ரஜினியும் கமலும் சொத்து சேர்க்க பிரிந்து நடித்தர்கள்.ரஜினி ஆன்மீக அரசியல் என்கிறார் கமல் நாத்திக அரசியல் என்கிறார்கள் ஒரு வகையில் இருவரும் ஒன்று சேர்ந்து தமிழகத்தை விற்கப் போகிறார்கள் பாஜகவிற்கு இந்த கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றார். இப்பொழுது மக்களை அழிக்க நினைக்கும் கூட்டத்திற்கு துணை நிற்கின்றனர் இந்த இரு நடிகர்களும்.

தமிழத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆனாலும், ஸ்டெர்லைட் என்றாலும், தமிழக மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
முன்னதாக பேரறிவாள் சகோதரியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பேரறிவாளன் அம்மா அற்புதம்மாள் மற்றும் அவரின் அப்பா குயில்தாசன் மற்றும் நடிகர்களான பொன்வண்ணன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி இன்னும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைக்குச் சென்ற பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.மிக நீண்டகாலமாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளனுக்கு 2011 செப்டம்பர் 9 இல் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது. பின்பு தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து 2014 பிப்ரவரி 18 தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.