ETV Bharat / city

அமமுகவிலிருந்து தாய் கழகத்திற்கு தாவும் நிர்வாகிகள்! - சேலம் அதிமுக

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி தலைவர் ஜோதிவாணன் உள்பட திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 13 பேர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சேலத்தில் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

ammk caders joined in admk
ammk caders joined in admk
author img

By

Published : Jul 24, 2021, 6:08 PM IST

சேலம்: அதிமுகவில், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அமமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் இணைந்தனர்.

அமமுக மாநில இளைஞரணி தலைவர் ஜோதிவாணன், திருச்சி மாவட்ட அமமுக இளைஞரணி செயலாளர் பாலாஜி, மாவட்ட பேரவை தலைவர் ராஜா, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சரவணன், மாவட்ட மாணவரணி தலைவர் பாபு, மாவட்ட அமைப்பு செயலாளர் சொக்கலிங்கம், மாநகர வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கௌசல்யா, நெசவாளர் அணி செயலாளர் சீனிவாசன் ஆகியோர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.

அதேபோல், திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை பகுதி செயலாளர் வேலு, பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன், ஏர்போர்ட் பகுதி செயலாளர் நாகராஜ், 19ஆவது வட்ட கழக செயலாளர்கள் கணேசன், 35ஆவது வட்ட கழக செயலாளர் சரவணன் ஆகியோர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.

புதிதாக அதிமுகவில் இணைந்தவர்களுக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.