சேலம் : ரூ.2.6 லட்சம் ஒரு ரூபாய் நாணயங்களை கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக சேகரித்துள்ளார் இந்த இளைஞர். பைக் வாங்க அவர் கொடுத்த இந்த நாணயங்களை இருசக்கர வாகன ஷோரூம் பணியாளர்கள் வியர்க்க வியர்க்க எண்ணினர். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.
சினிமாவில் நடைபெறும் சம்பவங்கள் நிஜத்திலும், நிஜத்திலும் நடைபெறும் சம்பவங்கள் அப்படியே சினிமாவிலும் நடப்பதுண்டு. சரத்குமார், விஜயகுமார் நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற படம் நட்புக்காக. இந்தப் படத்தில் கார் வாங்க செல்வது போன்ற காட்சி ஒன்று உண்டு.
அதன்படி புதிய கார் வாங்க சரத் குமார், விஜய குமார் என இருவரும் சாக்குப் பையில் பணத்தை மூட்டையாக கட்டிக் கொண்டு கார் ஷோரூமுக்கு செல்வார்கள். இவர்களை பார்த்த கார் ஷோரூம் பணியாளர்கள் இவர்கள் கார் வாங்க வந்துள்ளார்களா? அல்லது கார் ஷோரூமை சுற்றிப் பார்க்க வந்துள்ளார்களா? என ஏற்ற இறக்கத்துடன் பார்ப்பார்கள்.
இந்த நிலையில் சாக்கு மூட்டையில் கட்டுக் கட்டாக இருந்த பணத்தை கீழே அவித்து கொட்டுவார்கள். இதைப் பார்த்த ஷோரூம் ஊழியர்களுக்கு ஒருகனம் தலையே சுற்றிவிடும். விழி பிதுங்கி பணத்தையை பார்த்துக்கொண்டு இருப்பார்கள். இந்தப் பணத்தை விவசாயம் மூலம் சம்பாதித்ததாக கூறுவார்கள்.
இந்தக் காட்சியைப் போன்று சம்பவம் ஒன்று சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது. இளைஞர் ஒருவர் பை நிறைய 1 ரூபாய் நாணயங்களை கொண்டு பைக் ஷோரூம் சென்று ரூ.2.6 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளார்.
இந்தக் காசுகளை ஷோரூம் ஊழியர்கள் வியர்க்க வியர்க்க எண்ணினார்கள். இந்த நாணயங்கள் இன்று நேற்று அல்ல, கிடடத்தட்ட 3 ஆண்டுகள் சேகரிக்கப்பட்டவை என்கிறார் அந்த இளைஞர். ரூ.1 நாணயங்களை கொடுத்து இளைஞர் ரூ.2.6 லட்சம் பைக்-ஐ வாங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகின்றன.
இதையும் படிங்க : வேலுநாச்சியாருடன் வந்து வேட்புமனு தாக்கல்