ETV Bharat / city

பிடிமாடான காளைக்குச் சிறப்பு பரிசா? வேண்டாம்... கெத்துகாட்டிய வீரத்தமிழச்சி - கெத்துக் காட்டிய வீரத்தமிழச்சி யோகவர்ஷினி

அமைச்சர் மூர்த்தி அழைத்தும் இந்த முறையும் வீரத்தமிழச்சி யோகதர்ஷினி சிறப்புப் பரிசு பெற மறுத்துவிட்டார்.

வீரத்தமிழச்சி யோகவர்ஷினி
வீரத்தமிழச்சி யோகவர்ஷினி
author img

By

Published : Jan 14, 2022, 9:03 PM IST

மதுரை: மதுரை ஐராவத நல்லூரைச் சேர்ந்தவர் யோகதர்ஷினி. பள்ளியில் பயில்கிறார். ஜல்லிக்கட்டுத் தடைக்குப் பிறகு நடைபெற்ற போராட்டம்தான் ஜல்லிக்கட்டுக் காளைகளின் மீது இவருக்கு நாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது தந்தையும், அண்ணனும் ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்ப்பில் ஈடுபட்டாலும், மிக மிக பின்னால்தான் தனக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டதாக யோகதர்ஷினி குறிப்பிடுகிறார்.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில், தனது காளைகளை அவிழ்ப்பதைப் பெருமையாகக் கருதுகிறார். கடந்த முறை இதேபோன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனது காளையைக் களமிறக்கியபோது, தனக்கு விழாக் குழுவினர் வழங்க அழைத்தபோது, அதனைப் பெற மறுத்து காளையோடு நடையைக் கட்டினார்.

மைக்கில் கத்தினாலும் 'கெத்து கெத்துதான்'

அப்போதைய வருவாய்த் துறை அமைச்சராக ஆர்.பி. உதயகுமார், மைக்கில் யோகதர்ஷினியை பரிசு வழங்குவதற்காக அழைத்தபோதும் அதனை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை. அதேபோன்று, இந்தமுறை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனது காளையைக் களமிறக்கினார்.

அது வீரர்களால் பிடிக்கப்பட்டு பிடிமாடாக ஆனபோதும்கூட, விழாக் குழுவினர் யோகதர்ஷினிக்கு சிறப்புப் பரிசு வழங்க அழைத்தபோது 'கெத்து' காட்டினார்.

பரிசு வழங்க அழைத்தும் நிராகரிப்பு

தான் வளர்த்த காளை பிடிமாடாக ஆனதால், விழாக் குழுவினர் சிறப்புப் பரிசு வழங்க முன்வந்தபோதும்கூட அதனை வாங்க மறுத்து கெத்தாக நடைபோட்டு பார்வையாளர்களை அசத்தினார் யோகதர்ஷினி. தமிழ்நாடு வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மைக்கில் யோகதர்ஷினியை அழைத்தபோதும்கூட அழைப்பை நிராகரித்த துணிச்சல்; தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

தன் வளர்ப்பு காளை வெற்றி எப்போது பெறுகிறதோ அப்போது பரிசை மன நிறைவுடன் பெற்றுக்கொள்கிறேன் என்ற பாணியில் தனது காளையை அழைத்துக் கொண்டு நடையைக் கட்டினார். வீரத்தமிழச்சி யோகதர்ஷினியின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.