ETV Bharat / city

பணியில் இருந்த பெண் காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு - work pressure in police department

மதுரையில் காவல் நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போதே பெண் காவலர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

madurai ss colony police station
மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையம்
author img

By

Published : Jan 23, 2022, 4:01 PM IST

மதுரை: எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரிபவர் கலாவதி (47), இவரது கணவர் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

நேற்று (ஜன.22) இரவு பணிக்கு வந்த கலாவதி காவல் நிலையத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உடனடியாக அவரது உடல் உடற்கூராய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கலாவதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பணியின்போது உயிரிழந்ததால், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தாரா அல்லது காவல் நிலையத்தில் பணிச்சுமை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: செல்வராகவனுக்கு கரோனா தொற்று உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.