புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அறந்தாங்கி நகரம், காரைக்குடி நெடுஞ்சாலையில் செக்போஸ்ட் அருகில் புதிதாக மதுபானக்கடை அமைக்க எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இம்மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப்பதிவு செய்த நீதிபதிகள், தற்போதைய நிலவரம் என்னவென்று தெரியவில்லை? படிப்படியாக கடைகள் மூடப்பட்டுள்ளதா, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும், எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வருமானம் வந்தது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்களின் நலனில் அக்கறை கொள்ளுமா அரசு?