ETV Bharat / city

தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பதற்கு என்ன அவசரம்? - நீதிபதி கேள்வி - madurai high court

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பிற்கு தடை கோரிய வழக்கில், தற்காலிக ஆசிரியரை நியமிப்பதற்கு என்ன அவசரம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தற்காலிக ஆசிரியரை நியமிப்பதற்கு என்ன அவசரம்? - நீதிபதி கேள்வி

author img

By

Published : Jul 5, 2022, 3:20 PM IST

மதுரை: தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பிற்கு தடை கோரி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு அரசு கடந்த 23ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு போடப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி தமிழ்நாடு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு முறையீடு செய்யப்பட்டது. அதில், தமிழ்நாடு முழுவதும் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது ஆனால், 13 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய முடியாமல் உள்ளது.

இதனையடுத்து நீதிபதி, எந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறது என கேள்வி எழுப்பினார். அரசு தரப்பில், TET முடித்தவர்கள் மற்றும் தகுதியான ஆசிரியர்களை நியமிக்கப்படுகிறார்கள், என தெரிவிக்கப்பட்டது.

அப்படி என்றால் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கலாமே? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு என்ன அவசரம் உள்ளது எனக் கூறி வழக்கு பட்டியலிடப்பட்ட ஜூலை 8 ஆம் தேதியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார்

இதையும் படிங்க: பொதுக் குழுவுக்கு தடையா?: ஓபிஎஸ் மனு நாளை விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.