மதுரை மாவட்டம் மேலூர்-சிவகங்கை சாலை வழியாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல எச்சம் கடத்தப்பட உள்ளதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார், மேலூர்-சிவகங்கை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிவகங்கையிலிருந்து நத்தத்திற்கு வந்த காரில் அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து காரில் வந்த அழகு, பழனிசாமி, குமார் மூவரும் கைது செய்யப்பட்டனர். அத்துடன் கார் மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், பறிமுதல் செய்யப்பட்ட அம்பர்கிரிஸ் மதிப்பு 2 கோடியே 50 லட்சம் ரூபாய். இந்த குற்றமானது வனச் சட்டத்தின்கீழ் வருவதால் கைப்பற்றப்பட்ட பொருள்களை வனத்துறையிடம் ஒப்படைக்க உள்ளோம்" என்றனர்.
அம்பர்கிரிஸ் என்றால் என்ன?
அம்பர்கிரிஸ் (Ambergris), திமிங்கிலத்தின் செரிமான உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவாகும். இது சாம்பல், கருப்பு நிறங்களில் காணப்படுகிறது. பாலியல் மருந்துகள், வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுகிறது. உலகளவில் இதற்கு மார்க்கெட் உள்ளது. இரண்டு கிலோ அம்பர்கிரிஸ் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என்பதால், பல கடத்தல் சம்பவங்களும் நிகழ்கின்றன.
இதையும் படிங்க: Ambergris Seized: ரூ.4 கோடி மதிப்புள்ள திமிங்கல வாந்தி பறிமுதல்