ETV Bharat / city

கிரிக்கெட் மைதானங்களாகும் மதுரைக் கண்மாய்கள்!

வைகையில் இரு கரை தொட்டு தண்ணீர் ஓடியும் கடந்த சில நாட்கள் தொடர் மழை பெய்தும் கூட, மதுரையின் முக்கிய நீர் நிலைகளில் கால் பங்கு தண்ணீர் கூட பெருக வில்லை. மதுரையின் முக்கிய நீர் ஆதாரங்களாக இருக்கும் கண்மாய்கள் வறண்டு கிரிக்கெட் மைதானங்களாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கிரிக்கெட் மைதானங்களாகும் மதுரை கண்மாய்கள்!
author img

By

Published : Nov 7, 2019, 9:20 PM IST

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிக மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக ஒரு நாளில் மட்டும் ஒட்டுமொத்த மாவட்டத்திலும் 756 மில்லிமீட்டர் அளவில் மழை பெய்தது. இருப்பினும், மதுரையின் முக்கிய நீர் நிலையாக கருதப்படும் வண்டியூர் கண்மாய், செல்லூர் கண்மாய், மாடக்குளம் கண்மாய், தென்கால் கண்மாய் ஆகிய முக்கிய கண்மாய்களில் கால்பகுதி தண்ணீர் கூட இல்லாமல் பெரும்பகுதி வறண்டே கிடக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நல்ல மழைப் பொழிவு இருந்ததன் காரணமாக வைகை அணையில் ஓரளவு தண்ணீர் நிறைந்தது. இதுபோக மஞ்சளாறு அணையில் நிரம்பியதால் திறக்கப்பட்ட நீர் காரணமாகவும் ஓரளவு வகையில், இரண்டு கரை தொட்டு நீர் ஓடியது. இருப்பினும் மதுரையின் முக்கியமான நீர் நிலைகளில் கால் பங்கு நீர் கூட பெருகவில்லை. இதனால் நிலத்தடி நீரும் அதிகரிக்க வாய்ப்பில்லை.

கண்மாய்களின் வறட்சிக்கு காரணம் என்ன? - மக்கள் பேட்டி

வண்டியூர் கண்மாய்:

மதுரையில் சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வண்டியூர் கண்மாய் அண்ணாநகர், செனாய் நகர், கோமதிபுரம், மேலமடை, அனுப்பானடி, வண்டியூர் தெப்பக்குளம், காமராஜர் சாலை உள்ளிட்டப் பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்மாய்க்குள் ஓரளவு குடிமராமத்துப் பணிகள் மேற்கொண்டு இருந்தாலும், தண்ணீர் வரும் வரத்துக் கால்வாய்கள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், வண்டியூர் கண்மாய் வறண்டே காணப்படுகிறது. இதனை பொதுப்பணித் துறையும் மதுரை மாநகராட்சியும் உடனடியாக சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செல்லூர் கண்மாய்:

மதுரை மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பெரிய கண்மாய்களில் செல்லூர் கண்மாய் முக்கியமானது. இந்த கண்மாயில் 48 லட்ச ரூபாய்க்கு குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் அந்த கண்மாயும் கால் பங்கு கூட நிறையவில்லை. செல்லூர் கண்மாய்க்கு சாத்தையாறு அணையில் இருந்து வரும் நீரானது குலமங்கலம், பூதகுடி, பனங்காடி, ஆனையூர், ஆலங்குளம், முடக்கத்தான் கண்மாய்களின் வழியே கடைமடையாக செல்லூரில் வந்து நிறைகிறது. இருப்பினும் செல்லூர் கண்மாய் செல்லா காசாகிப் போனதுதான் மிச்சம். இது ஒரு பக்கம் இருப்பினும் கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாய்கள் நெகிழி கழிவுகளால் நிரம்பி காணப்படுகிறது.

water bodies turned as cricket grounds in madurai
வைகையில் வரும் வெள்ளம்!

இந்த ஆக்கிரமிப்பாளர்கள் மாடக்குளம், தென்கரை கண்மாய்களையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் இதே நிலைமை தான். மதுரையின் முக்கிய கண்மாய்களெல்லாம் தற்போது மாணவர்கள் விளையாடும் கிரிக்கெட் மைதானங்களாய் மாறி வரும் அவலம் தான் அரங்கேறுகிறது. வைகையில் வெள்ளம் வரும் என்பது கனவாகி போனது போல இந்த கண்மாய்களை நீர் சூழம் காலம் வரும் என்பதும் கனவாகவே போகுமோ?

இது குறித்து தெரிவிக்கும் மதுரை மக்கள், "கண்மாயில் கரையை உயர்த்துதல், நீர்நிலையை ஆழப்படுத்துதல், கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் என பல்வேறு செயல்பாடுகளை மிக சிறப்புடன் பொதுப்பணித்துறை மேற்கொண்டு வந்தாலும் கண்மாய்களில் வரத்துக் கால்வாய்களை சரி செய்தால் ஒழிய கண்மாய்க்கான நீர்வரத்தை உறுதி செய்ய முடியாது" என்ற ஒரே பதிலைத் தான் உச்சரிக்கிறார்கள். ஆகவே ஆக்கிரமிப்புகளை சரி செய்தால் மட்டுமே மதுரையின் முக்கிய நீர் நிலைகளான வண்டியூர், செல்லூர், மாடக்குளம், தென்கால் கண்மாய்களுக்கு விடியல் பிறக்கும். இல்லையேல் உள்ளூர்வாசிகளால் கிரிக்கெட் மைதானங்கள் தான் ஆகும்.

இதையும் படிங்க:

"எனக்கு இயற்கை வியாபாரம்; இணையம் விளம்பரம்" - அசத்தும் 90'ஸ் கிட்ஸ் மங்கை

Intro:வைகையில் பெருகியும் கண்மாய்களில் தண்ணீர் இல்லை - கண்ணீரோடு மதுரை மக்கள்

வைகையில் இரு கரை தொட்டு தண்ணீர் ஓடியும் கூட மதுரையின் முக்கியமான நீர்நிலைகளில் கால் பங்கு தண்ணீர் கூட பெருகவில்லை. இதனால் நிலத்தடி நீர் அதிகரிக்க வாய்ப்பில்லை. மதுரை மக்கள் கண்ணீரோடு வான் மழையை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.Body:வைகையில் பெருகியும் கண்மாய்களில் தண்ணீர் இல்லை - கண்ணீரோடு மதுரை மக்கள்

வைகையில் இரு கரை தொட்டு தண்ணீர் ஓடியும் கூட மதுரையின் முக்கியமான நீர்நிலைகளில் கால் பங்கு தண்ணீர் கூட பெருகவில்லை. இதனால் நிலத்தடி நீர் அதிகரிக்க வாய்ப்பில்லை. மதுரை மக்கள் கண்ணீரோடு வான் மழையை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிக மழைப்பொழிவு இருந்தும்கூட மதுரையின் முக்கிய நீர் நிலையாக கருதப்படும் வண்டியூர் கண்மாய் செல்லூர் கண்மாய் மாடக்குளம் கண்மாய் தென்கால் கண்மாய் இந்த நான்கிலும் கால்பகுதி தண்ணீர் கூட இல்லாத நிலையில் பெரும்பகுதி வறண்டே கிடக்கிறது.

வங்கக்கடலில் அன்மையில் உருவான மகா புயல் காரணமாக மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து 3 நாட்களுக்கு மழை பொழிவு இருந்தது. குறிப்பாக ஒரு நாளில் மட்டும் ஒட்டுமொத்த மாவட்டத்திலும் 756 மில்லிமீட்டர் மழை பெய்து இருந்தது. ஆனால் மேற்கண்ட மதுரையின் முக்கிய நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து சுத்தமாக இல்லை.

இதுகுறித்து வண்டியூர் கண்மாய் பயனாளிகளில் ஒருவரான ராசு கூறுகையில், அண்ணாநகர் செனாய் நகர் கோமதிபுரம் மேலமடை அனுப்பானடி வண்டியூர் தெப்பக்குளம் காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு வண்டியூர் கண்மாய் முக்கியமானதாகும். கண்மாய்க்குள் ஓரளவு மராமத்துப் பணி மேற்கொண்டு இருந்தாலும் தண்ணீர் வரும் வரத்து கால்வாய்களில் பெருமளவு ஆக்கிரமிப்பு உள்ளது இதனை பொதுப்பணித் துறையும் மதுரை மாநகராட்சியும் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றார்.

மதுரையின் மற்றொரு நீர் ஆதாரமான செல்லூர் கண்மாய் குடிமராமத்து பணிகள் மூலமாக 48 லட்ச ரூபாய்க்கு இங்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் அந்த கண்மாயும் கால் பங்கு கூட நிறையவில்லை இதுகுறித்து செல்லூர் கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க செயலாளர் அபுபக்கர் கூறுகையில், செல்லூர் கண்மாயில் பொதுப்பணித்துறை கரையை உயர்த்துதல் நீர்நிலையை ஆழப்படுத்துதல் கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் என பல்வேறு செயல்பாடுகளை மிக சிறப்புடன் மேற்கொண்டிருக்கிறது அதேபோன்று செல்லூர் கண்மாயின் வரத்து கால்வாயை ஆக்கிரமிப்பு அகற்றி செப்பனிட்டு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் செல்லூர் கண்மாய்க்கு சாத்தையாறு அணையில் இருந்து, குலமங்கலம் பூதகுடி பனங்காடி ஆனையூர் ஆலங்குளம் முடக்கத்தான் கண்மாய்களின் வழியே கடைமடையாக செல்லூரில் வந்து நிறைகிறது. மேற்கண்ட கண்மாய்களில் வரத்து கால்வாய்களை சரி செய்தால் ஒழிய செல்லூர் கண்மாய்க்கான நீர்வரத்தை உறுதி செய்ய முடியாது என்றார்

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நல்ல மழை பொழிவு இருந்ததன் காரணமாக வைகை அணையில் ஓரளவு தண்ணீர் நிறைந்தது. இதுபோக மஞ்சளாறு அணையில் நிரம்பிய தண்ணீர் காரணமாகவும் ஓரளவு வகையில் தண்ணீர் இரண்டு கரை தொட்டு ஓடியது. இருந்தபோதும் வைகையில் இருந்து கண்ணாடிகளுக்கு செல்லும் பெரும்பாலான நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன அவற்றை எல்லாம் சரி செய்தால் மதுரையின் முக்கிய நீர் நிலைகளான வண்டியூர் செல்லூர் மாடக்குளம் தென்கால் கண்மாய்களுக்கு விடிவு பிறக்கும் மதுரை மக்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறும்.

மதுரை மாநகராட்சியின் பொதுப்பணித் துறையும் கண்டுகொள்ளுமா?Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.