மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார். இவர் செல்லூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்துவந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஒன்பதாம் தேதி இரவு பணி முடிந்து தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது பி.மேட்டுப்பட்டி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் மதுரை தனியார் மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சசிக்குமார் மூளை சாவு அடைந்தார்.
உடனடியாக அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்ப உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்ததால் இவரது உடலிலிருந்து 9 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு மற்ற 9 நபர்களுக்கு பொறுத்தப்பட்டது. இறந்த காவலரின் உடல் உறுப்புகளை பெற்று 9 நபர்கள் தங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி அடைந்துள்ள இச்செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: