ETV Bharat / city

குறவர் இனத்தை பழங்குடியின பட்டியலில் சேர்க்கக் கோரி தர்ணா! - சென்னை செய்திகள்

குறவர் இனத்தை பழங்குடியின பட்டியலில் சேர்க்கக் கோரி வனவேங்கைகள் கட்சியினர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுட்டனர்.

தலைமை செயலகம்
தலைமை செயலகம்
author img

By

Published : Apr 14, 2022, 9:48 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில், மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தலைமை செயலகம் சுற்றி பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று (ஏப்.13) மதியம் தமிழ்நாடு முதலமைச்சர் தனி பிரிவு முன்பாக மனு கொடுக்க வேண்டும் என வந்த 5 பேர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி பட்டியலில் உள்ள நரிக்குறவர் என்கிற சாதி பெயரில் குறவர் பெயரை மட்டும் உடனடியாக நீக்க வேண்டும். அத்துடன் தங்களை எம்பிசி (MBC) பிரிவிலிருந்து பழங்குடியினர் (ST) பிரிவில் தங்களை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுக்க வனவேங்கை கட்சியினர் வந்திருந்தனர்.

பின்னர், முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு அனுமதி இல்லை என்ற உடன் முதலமைச்சர் தனி பிரிவு முன்பு தர்ணாவில் ஈடுப்பட்டதால் தலைமை செயலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் இருந்த காவல் துறையினர் தர்ணாவில் ஈடுபட்டவர்களை கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர்.

இதையும் படிங்க: 50 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாத கிராம மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.