தமிழ்நாட்டின் பெரும்பாலான காவல் நிலையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால், அவற்றை சொந்தக் கட்டடத்தில் இயங்குவதற்கு தேவையான நிதியை அரசு ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மதுரை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட கீரைத்துறை, எஸ்எஸ் காலனி காவல் நிலையங்கள் தனியார் கட்டடத்தில் இயங்கி வந்தன. இதற்கு சொந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு காவல் நிலையங்களும் இன்று திறக்கப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் ரூ. 158 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொலிவுடன் எஸ்.எஸ். காலனி காவல் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மேலும், கீரைத்துறை காவல் நிலையமும் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இதனிடையே, எஸ்எஸ் காலனி காவல் நிலைய கட்டட திறப்பு விழாவில், ஆய்வாளர் பிளவர் சீலா தலைமையில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சிவபிரசாத், குற்றப் பிரிவு துணை ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர்.