இது தொடர்பாக வங்கிப் பணியாளர் தேர்வாணையத்திற்கும், தமிழ்நாடு கிராம வங்கித் தலைவருக்கும், அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”மண்டல கிராம வங்கி அதிகாரிகள் நியமனங்களுக்கான நேர்காணல், பிப்ரவரி 19 ல் இருந்து 22 வரை வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. மண்டல கிராம வங்கிகளின் எழுத்தர் இறுதித் தேர்வுகளும் பிப்ரவரி 20 அன்று நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அழைப்புக் கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த இரண்டு தேர்வுகளும் ஒரே தேதியில் இருப்பதால், நிறைய தேர்வர்களை பாதிக்கக்கூடும். ஆகவே, அதிகாரிகள் நியமனத்திற்கான நேர்காணல் தேதியைப் பிரிதொரு நாளுக்கு மாற்றி, இரண்டு தேர்வுகளிலும் பங்கேற்க வேண்டிய பலரின் பாதிப்பைத் தவிர்க்க வேண்டும்.
பணி நியமனங்களுக்கான தயாரிப்புகளை மாதக் கணக்கில் செய்யும் இளைஞர்களின் சிரமத்தை கணக்கிற் கொண்டு, தேதிகள் ஒரே நேரத்தில் அமையாத வண்ணம் தொடர்புடைய அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று அதில் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பொதுத்தேர்விற்கு தயாராகிவிட்டனரா அரசுப் பள்ளி மாணவர்கள்?