சென்னை: மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (Right To Information Act - RTI) மூலம் தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையிடம் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பழங்குடியினர் நலத்துறை இன்று (ஜூன் 1) பதிலளித்துள்ளது.
அதில், ஓன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து தமிழ்நாட்டில், பழங்குடியினர் நலத்துறைக்கு கடந்த 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய மூன்று நிதியாண்டுகளில் மொத்தம் ரூ.1,310,94,57,000 (ஆயிரத்தி 310 கோடிகள் வரை) நிதிஒதுக்கீடு செய்துள்ளனர். அதில் ரூ.1,045,24,47,000 (ஆயிரத்தி 45 கோடிகள் வரை) மட்டுமே திட்டங்களுக்கு செலவு செய்துள்ளனர்.
4 துறைகளுக்கு பகிர்ந்தளிப்பு: மீதம் உள்ள ரூ 265,70,10,000 (இருநூற்று 65 கோடிகள் வரை) செலவு செய்யப்படாமல் அரசு கஜானாவிற்கே திரும்பவும் ஒப்படைத்துள்ளனர். வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பிற துறைகளுக்கு பகிர்ந்தளிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட நிதியிலிருந்து கடந்த 2019-20 நிதியாண்டில் வனத்துறைக்கு ரூ.10 கோடிகளும், அதற்கு அடுத்தாண்டு 2020-21 நிதியாண்டில் வனத்துறைக்கு ரூ.67.77 கோடிகளும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறைக்கு ரூ.58.17 கோடிகள் மற்றும் பேரூராட்சிகள் துறைக்கு ரூ.4.05 கோடிகள் என்று அந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் ரூ. 129.9 (நூற்று இருபத்தி ஒன்பது கோடிகள்) வரை பிற துறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் கார்த்திக் கூறுகையில், 'பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகளான நில உரிமை பட்டா, குடியிருப்பு வீடு, கல்வி, சுகாதார திட்டங்கள், மின்சாரம், சாலை வசதிகள் என்று பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் முழுமைபெறாமல் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.இதையும் படிங்க: ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.927 கோடி நிதி பயன்படுத்தாமலேயே திருப்பி அனுப்பப்பட்டதாக RTIஇல் அதிர்ச்சித் தகவல்!