மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் கோட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட இருக்கின்றன.
- அக்டோபர் 20 முதல் 27 வரை மும்பையிலிருந்து புறப்படும் வண்டி எண் 01201 மும்பை லோக்மான்ய திலக் - மதுரை சிறப்பு ரயில், அக்டோபர் 22ஆம் தேதி மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 01202 மதுரை - மும்பை லோக்மான்ய திலக் சிறப்பு ரயில் ஆகியவை மட்கான், மங்களூரு, ஷோரனூர், பாலக்காடு, ஈரோடு, திருச்சி வழியாக இயக்கப்படும்.
- அக்டோபர் 18, 19, 20, 22, 25, 26, 27 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலிலிருந்து புறப்படும் வண்டி எண் 06340 நாகர்கோவில் - மும்பை ஜிஎஸ்டி சிறப்பு ரயில், அக்டோபர் 19, 20, 21, 23, 26, 27 ஆகிய தேதிகளில் மும்பையிலிருந்து புறப்படும் வண்டி எண் 06339 மும்பை சிஎஸ்டி - நாகர்கோவில் சிறப்பு ரயில் தானே, பன்வெல், ரோஹா, மட்கன், மங்களூரு, ஷோரனூர், பாலக்காடு, ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.
- அக்டோபர் 21, 24 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலிலிருந்து புறப்படும் வண்டி எண் 06352 நாகர்கோவில் - மும்பை ஜிஎஸ்டி சிறப்பு ரயில், அக்டோபர் 18, 25 ஆகிய தேதிகளில் மும்பையிலிருந்து புறப்படும் வண்டி எண் 06351 மும்பை சிஎஸ்டி - நாகர்கோவில் சிறப்பு ரயில் தானே, பன்வெல், ரோஹா, மட்கன், மங்களூரு, ஷோரனூர், பாலக்காடு, ஈரோடு, திருச்சி வழியாக இயக்கப்படும் என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரயில் பயணிகள் கவனத்திற்கு: வைகை, பல்லவன் ரத்து!