ETV Bharat / city

ஆயுத தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் முயற்சி - தொழிற்சங்கங்கள் எம்.பி.யிடம் மனு

author img

By

Published : Jul 14, 2021, 8:20 PM IST

மதுரை: ஒன்றிய அரசுக்குச் சொந்தமான ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளை தனியார்மயமாக்கும் முடிவைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த உள்ளன. இதனையொட்டி நாடாளுமன்றத்தில் இதுகுறித்து வலியுறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மனு அளித்தனர்.

ஆயுத தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் முயற்சி

ஆயுத தொழிற்சாலை வாரியத்தின் (Ordinance Factory Board)கீழ் இயங்கக் கூடிய 41 ராணுவத் தளவாட தொழிற்சாலைகளை ஒன்றிய அரசு 7 குழுக்களாகப் பிரித்து தனியாருக்கு தாரைவார்த்து கொடுக்கும் முயற்சிகளை எடுத்துவருகிறது.

இதனை எதிர்த்து அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் (All India Defence Employees Federation), தேசிய பாதுகாப்பு தொழிலாளர் கூட்டமைப்பு (National Defence Workers Federation), பாரதிய பிரதிக்‌ஷா மஜ்துர் சங் (Bharathiya Prathiksha Mazdoor Sang) ஆகிய மூன்று சம்மேளனங்கள் இணைந்து வருகின்ற 26ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டங்களை அறிவித்துள்ளன.

இந்த தொழிற்சங்கங்களின் போராட்டங்களை முறியடிக்கும் பொருட்டு EDSO-2021 (Essential Defence Service Ordinance) என்கிற அவசர சட்டத்தினை குடியரசுத் தலைவர் ஒப்புதலின் பேரில் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

இதனை எதிர்த்து 41 ராணுவத் தளவாட தொழிற்சாலைகளில் இயங்கக்கூடிய தொழிற்சங்கங்கள் இணைந்து இச்சட்டத்தினையும், ராணுவத் தொழிற்சாலைகளை தனியார் மயமாக்குவதையும் கண்டித்து கடந்த 8ஆம் தேதியிலிருந்து தொடர் போரட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கு கைகொடுக்கும் விதமாக மத்திய சம்மேளனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களும் வருகின்ற 21ஆம் தேதி அன்று எதிர்ப்பு தினமாக அறிவித்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக நாடாளுமன்றக் கூட்டத்தில் இப்பிரச்னையை எழுப்ப வலியுறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: அமித்ஷா பெரிய சங்கி; அண்ணாமலை சின்ன சங்கி!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.