ETV Bharat / city

தேசிய மருந்தியல் கழகம் அமைக்கும் பணியை தீவிரப்படுத்துக - சு. வெங்கடேசன் எம்பி

மதுரையில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வு கழகத்தை அமைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

சு. வெங்கடேசன் எம்பி
சு. வெங்கடேசன் எம்பி
author img

By

Published : Oct 23, 2021, 3:45 PM IST

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வுக்கழகத்தை (NIPER ) மதுரையில் அமைப்பது தொடர்பான கடிதங்களை வழங்கி, திட்டத்தை தொடங்குவதற்கான சாத்தியகூறுகள் குறித்தும், விரைந்து தொடங்கவேண்டிய தேவை குறித்தும் உரம் மற்றும் ரசாயனத்துறை செயலாளர் அபர்னா, நிதித்துறை செயலளர் சோமநாதன் ஆகியோரை சந்தித்துப் பேசினேன்.

ஒன்றிய ரசாயனத் துறை செயலாளரிடம் கோரிக்கை

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்திற்காக மதுரையில் 2012ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்திற்கு முன்நுழைவு அனுமதிக்கான சான்று மட்டுமே தரப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்நிலம் கழகத்தின் பெயரில் பெயர் மாற்றம் செய்யப்படாமலே உள்ளது. அதற்கான விண்ணப்பமும் மருந்தியல் கழகம் சார்பில் இதுவரை தரப்படவில்லை.

இது தேவையற்ற பிரச்னையை பிற்காலத்தில் உருவாக்கும். குறிப்பாக மதுரை எய்ம்ஸ் போல, நிலத்துக்கான பெயர் மாற்றம், ஒப்படைத்தல் என்பதே பெரும் காலவிரயத்தை உருவாக்கும் நிலையும் ஏற்படலாம். சில நேரம் பிற வேலைகளுக்காக நிலம் பயன்படுத்தப்பட்டுவிடும் ஆபத்தும் உள்ளது.

சு. வெங்கடேசன் எம்பி
சோமநாதனுடன் சு. வெங்கடேசன் எம்பி

எனவே நிலத்தை தேசிய மருந்தியல் கல்விக் கழகத்தின் பெயரில் மாற்றித்தர உரிய விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு துறைச் செயலாளரிடம் வலியுறுத்தினேன். மதுரை மாவட்ட வருவாய்த்துறை அலுவலரிடமிருந்து பெற்றுவந்த விண்ணப்பங்களையும் ஒன்றிய அரசின் செயலாளர் வசம் ஒப்படைத்தேன். விரைவில் இதற்கான நடவடிக்கைகள் தீவிரமடையும் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பேருந்தில் திடீரென ஆய்வு செய்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.