கரூர் மாவட்டத்தில் வெண்ணைமலை பால சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் காதப்பாறை, ஆண்டாங்கோவில், ஆத்தூர் ஆகிய கிராமங்களில் உள்ளன. சுமார் 530 ஏக்கர் அளவில் உள்ள இந்த கோயில் நிலங்கள் தற்போது சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
காதப்பாறை, ஆண்டாங்கோவில் உள்ளிட்ட இடங்களில் உள்ள இந்த கோயில் நிலங்களை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களை அகற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கானது நீதிபதிகள் சுப்பையா, புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது . அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தனர் .
இந்நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைகக்கு வந்தபோது, கரூர் பாலசுப்ரமணியன் கோயிலுக்கு சொந்தமான, நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை, இந்து அறநிலைத்துறை சட்டம் பிரிவு 78ன் படி, ஆறு மாதத்திற்குள் அகற்ற கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு, கோயில் நிர்வாகம் சார்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்றும் அந்த வழக்குகளை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: