மதுரை: தஞ்சையைச் சேர்ந்த பிரபல ரவுடி கட்டை ராஜா வழக்கு, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கும்பகோணம் காவல் துறையினர் நேரில் ஆஜராகியிருந்தனர். அதற்கு நீதிபதிகள், "மதுரைக்கிளையில் ஏராளமான காவல் துறையினர், பல்வேறு வழக்குகளில் ஆஜராவதற்காக குவிந்துள்ளனர். காவல் துறையினருக்கு காவல் நிலையத்தில் நிறைய வேலை உள்ளது.
நீதிமன்றத்தில் காவல் துறையினர் குவிந்து, அதனையும் மினி காவல்நிலையம் போல் மாற்றிவிடுகின்றனர். கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் இது போல கூட்டம் சேர்ப்பது ஏற்கத்தல்ல" என்று கூறினர்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா… மீண்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு!!