மதுரை மாநகர் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட செந்தில்நாதன் தெரு பகுதியில் தனியார் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பணிக்குச் செல்லும் பெண்கள் என 40-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று(அக்.14) இரவு பெய்த கன மழை காரணமாக விடுதியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது.
இதில் அறையில் தங்கியிருந்த இரண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் ஒரு இளம்பெண் உள்ளிட்ட மூன்று பெண்கள் காயம் அடைந்தனர். இதனையடுத்து மூவரையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அண்ணா நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உரிய அங்கீகாரம் பெற்று நடத்தப்படுகிறதா என்பது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தனியார் விடுதி முழுவதும் சேதமடைந்த கட்டிடத்தில் நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
![தனியார் தங்கும் விடுதி இடிந்து விபத்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-03-pvt-hostel-collapsed-script-7208110_15102022103444_1510f_1665810284_365.jpg)
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் பெண்கள் விடுதி உரிய பாதுகாப்பு இன்றியும் அங்கீகாரம் இன்றியும் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளதை தொடர்ந்து, சமூகநலத்துறை அதிகாரிகள் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சமூக அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்..!