ETV Bharat / city

கவுண்டன் ஆற்றில் தடுப்பணை கட்ட தடை கோரி வழக்கு - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

திருமங்கலம் திரளி கிராமத்தில் உள்ள கவுண்டன் ஆற்றில் தடுப்பணை கட்ட தடை கோரி வழக்கில் பொதுப்பணித் துறை, மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai court news
madurai court news
author img

By

Published : Feb 19, 2021, 9:52 PM IST

மதுரை: திருமங்கலத்தைச் சேர்ந்த செல்வபாண்டி, மாரி, பரமசிவம் உள்ளிட்ட 9 பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதில், “சிவரக்கோட்டை கண்மாய், புளியங்குளம் கண்மாய், புதுப்பேட்டை கண்மாய் உள்ளிட்ட கண்மாய்கள் மதுரை மாவட்ட நீர் நிலைகளின் ஓரங்களில் வாழும் கிராம மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன. இந்த கண்மாய்களை நம்பி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயமும் செய்து வருகின்றனர்.

இச்சூழலில், திருமங்கலம் திரளி கிராமத்தில் உள்ள கவுண்டன் ஆற்றில் சுமார் 2.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக புளியங்குளம் கண்மாய், சிவரக்கோட்டை கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களுக்கு நீர் கிடைக்காத அவல நிலை உருவாகும்.

குடிநீரைப் பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. அதனை ஒரு சாராருக்கு மட்டும் கிடைக்கும் வகையில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுப்பது ஏற்கத்தக்கதல்ல. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே மதுரை, திருமங்கலம் திரளி கிராமத்தில் உள்ள கவுண்டன் ஆற்றில் தடுப்பணை கட்ட தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் கண்காணிப்பு பொறியாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.