ETV Bharat / city

'ஒரு செங்கல்கூட இருக்கக் கூடாது' - வலையன் கண்மாய் வழக்கில் நீதிபதிகள் கண்டிப்பு

author img

By

Published : Jun 26, 2021, 1:22 PM IST

பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான வலையன் கண்மாய் நீர்வரத்து வாய்க்காலில் சுகாதார வளாகம் அமைக்கும் நடவடிக்கையை நிறுத்தக் கோரிய வழக்கில், ஒரு செங்கல்கூட அங்கு இருக்கக் கூடாது எனக் கண்டிப்புடன் தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், கட்டுமானத்தை உடனே நிறுத்துமாறும் உத்தரவிட்டனர்.

வலையன் கண்மாய் நீர்வரத்து வழக்கில் நீதிபதிகள் கண்டிப்பு

மதுரை: புதுக்கோட்டை வலையன் வயல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.

இந்த மனுவில், "புதுக்கோட்டை திருமயம் அருகே வலையன் வயல் கிராமம் உள்ளது. இங்குள்ள வலையன் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து கால்வாயில் சமுதாய சுகாதார வளாகம் அமைக்க கட்டுமான பணிகள் நடந்துவருகின்றன.

உழவர் நலன் கருதி...

அப்பகுதி பொதுமக்களிடம் எந்தவித கருத்துகளையும் கேட்காமல் ஊராட்சி மன்றத் தலைவர் தன்னிச்சையாக முடிவெடுத்து பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கண்மாய்க்கு வரும் வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுவருகிறது.

இதனால் அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் உள்பட அனைத்துக் கழிவுகளும் வலையன் கண்மாய்க்குச் செல்லும் கால்வாயில் கலந்து மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, உழவர்களின் நலன்கருதி கண்மாய் நீர்நிலைப் புறம்போக்குப் பகுதியை ஆக்கிரமித்து சுகாதார வளாகம் கட்டும் நடவடிக்கையை உடனடியாகத் தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

ஆக்கிரமிப்பால் கண்மாய் மாசடையும்

இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி சிவஞானம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், "நீர்வழி வாய்க்காலை ஆக்கிரமித்து சுகாதார வளாகம் கட்டுகின்றனர். இதனால் நீர்வரத்து பாதிக்கப்படுவதோடு, கண்மாய் நீரும் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், சுகாதார வளாகம் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

ஒரு செங்கல்கூட இருக்கக் கூடாது

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், கண்மாய்க்கு நீர் வரும் நீர்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து ஊராட்சி மன்றத் தலைவரே இவ்வாறு சுகாதார வளாகம் கட்டலாமா எனக் கேள்வி எழுப்பினர்.

நீர்வழிப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டுமானத்தில் ஒரு செங்கல்கூட அங்கு இருக்கக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த நீதிபதிகள், உடனடியாக கட்டுமானத்தை அகற்ற உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 3ஆவது அலை டெல்டா பிளஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.