ETV Bharat / city

பிஆர்பி நிறுவனம் மீண்டும் குவாரி இயக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி! - PRP has filed a petition seeking permission

மதுரை: பிஆர்பி கிரானைட் நிறுவனம் மீண்டும் குவாரியை இயக்க அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

high court
author img

By

Published : Nov 16, 2019, 1:13 PM IST

பிஆர்பி கிரானைட் பங்குதாரர் செந்தில்குமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாட்டில் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிரானைட் குவாரிகள் நடத்தி வருகிறோம். ஆனால், மதுரை மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் முறைகேடு நடைபெற்றதாக எங்கள் நிறுவனம் மீது 2012ஆம் ஆண்டு குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதன்பின், எங்கள் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யப்படும் கிரானைட்களை நிறுத்துமாறு சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களுக்கும், வங்கிக் கணக்குகளை முடக்குமாறு வங்கிகளுக்கும் டிஎஸ்பி கடிதம் அனுப்பினார். மதுரை மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் மட்டும் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், பிற மாவட்டங்களில் செயல்படும் குவாரிகளுக்கு இந்தக் கடிதம் பொருந்தாது.

ஆனால் இதன் அடிப்படையில், எங்கள் நிறுவனத்தின் கிரானைட் ஏற்றுமதி தடுக்கப்பட்டது மட்டுமல்லாமல், மேலூரில் உள்ள கிரானைட் பாலிஷ் நிறுவனத்தை செயல்படுத்த முடியவில்லை. எனவே, டிஎஸ்பி அனுப்பிய கடிதம் மதுரை மாவட்ட குவாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என துறைமுகங்களுக்கும், வங்கிகளுக்கும் விளக்கக் கடிதம் அனுப்ப டிஎஸ்பிக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி இளந்திரையன், கிரானைட் குவாரிகள் மூலம் 4 ஆயிரத்து 124 கோடியே 14 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதே கோரிக்கை தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதால், மனுதாரரின் கோரிக்கையை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது என உத்தரவு பிறப்பித்தார்.

Intro:பிஆர்பி கிரானைட் நிறுவனம் மீண்டும் குவாரி இயக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

ஏற்கனவே உச்சநீதிமன்றம் இதே கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்ததால் உயர்நீதிமன்ற மதுரை கிளையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு.
Body:பிஆர்பி கிரானைட் நிறுவனம் மீண்டும் குவாரி இயக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

ஏற்கனவே உச்சநீதிமன்றம் இதே கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்ததால் உயர்நீதிமன்ற மதுரை கிளையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு.

பிஆர்பி கிரானைட்ஸ் பங்குதாரர் செந்தில்குமார், உயர் நீதிமன்ற கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"

தமிழகத்தில் மதுரை உட்பட பல்வேறு மாவட்டத்தில் கிரானட் குவாரிகள் நடத்தி வருகிறோம். மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் முறைகேடு நடைபெற்றதாக எங்கள் நிறுவனம் மீது 2012, குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து எங்கள் நிறுவனம் சார்பில் கிரானைட்கள் கற்கள் ஏற்றுமதியை நிறுத்துமாறு சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களுக்கும், எங்கள் வங்கி கணக்குகளை முடக்குமாறு வங்கிகளுக்கும் டிஎஸ்பி கடிதம் அனுப்பினார்.

கீழவளவு காவல் நிலையத்தில் பதிவான வழக்குகள் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் பதிவான ஒரு வழக்கின் அடிப்படையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதங்கள் மதுரை மாவட்ட குவாரிகள் தொடர்பானது. பிற மாவட்டங்களில் செயல்படும் குவாரிகளை இந்த கடிதம் கட்டுப்படுத்தாது.

ஆனால் இந்த கடித்தின் அடிப்படையில் எங்கள் நிறுவனத்தின் கிரானைட் ஏற்றுமதி தடுக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் காரணமாக மேலூர் தெற்குத்தெருவில் உள்ள எங்களது கிரானைட் பாலிஷ் நிறுவனத்தை செயல்படுத்த முடியவில்லை.

இதனால் கிரானைட் ஏற்றுமதிக்கு தடை விதித்தும், வங்கி கணக்குளை மூடக்குமாறும் அனுப்பிய கடிதம் மதுரை மாவட்ட குவாரிகளுக்கு மட்டும் பொருந்தும் என துறைமுகங்களுக்கும், வங்கிகளுக்கும் விளக்க கடிதம் அனுப்ப டிஎஸ்பிக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், தமிழகத்தில் பிற கிரானைட் குவாரிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கிரானட் கற்கள் கொள்முதல் செய்து, தெற்குத்தெருவில் உள்ள கிரானைட் பாலிஷ் நிறுவனத்தில் வைத்து கிரானைட் கற்களை பாலிஷ் செய்து சிலாப்புகளாகவும், டைல்ஸ்களாகவும் மாற்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்கவும் அனுமதி வழங்க வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி இளந்திரையன் மனு தாரர் குவாரிகள் நடத்தியதில் முறைகேடுகளில் ஈடுபட்டு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளார் இதன் மூலம் 4ஆயிரத்து 124.14 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறபடுகிறது. இதே கோரிக்கை வைத்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யபட்டுள்ளது ஆனால் மீண்டும் இதே கோரிக்கை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடியுள்ளார் எனவே மனு தார்ரின் கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறது என்று உத்தரவு பிறபித்துள்ளார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.