ETV Bharat / city

மதுரையில் மாமனாரை நடுரோட்டில் விரட்டி வெட்டிய மருமகன் - அதிர்ச்சி வீடியோ - etvbharat

மதுரை காமராஜர் சாலையில் நடுரோட்டில் மாமனாரை வெட்டிய மருமகனை காவலர்கள் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரையில் மாமனாரை நடுரோட்டில் விரட்டி வெட்டிய மருமகன்

author img

By

Published : Aug 2, 2021, 8:55 PM IST

Updated : Aug 2, 2021, 9:16 PM IST

மதுரை: கருப்பாயூரணியைச் சேர்ந்தவர், ராஜபாண்டி. இவர் தனது மகளை, தங்கை மகனான அனுப்பானடி வடக்கு தெருவைச் சேர்ந்த முத்துமணி என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் கணவன் - மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதையடுத்து தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே தனது மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கும்படி பலமுறை மாமனாரிடம் முத்துமணி கேட்டுள்ளார்.

பட்டப்பகலில்... நடுரோட்டில்...

ஆனால், தனது மகள் திருமண பந்தத்தில் இணைந்து வாழ விரும்பவில்லை எனவும், தொடர்ந்து தொந்தரவு செய்யக்கூடாது எனவும் மருமகனை எச்சரித்து அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் தன்னோடு மனைவியைத் தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த மருமகன், மாமனாரை, மதுரை காமராஜர் சாலை சந்திப்புப் பகுதியில் வேலைக்கு வந்தபோது வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.

பின்னர் சிறிது நேரத்தில், தான் வைத்திருந்த மிளகாய்ப் பொடியை மாமனார் கண்ணில் தூவி அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார்.

மதுரை காமராஜர் சாலையில் நடுரோட்டில் மாமனாரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்ல முயன்ற மருமகன்

வைரல் வீடியோ

இச்சம்பவத்தை அங்கு வாகனங்களில் சென்றவர்கள் வீடியோ எடுத்தனர். அந்தக் காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மதுரை காமராஜர் சாலையில் நடுரோட்டில் மாமனாரை வெட்டிய மருமகன்

காயமடைந்த ராஜபாண்டியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், தப்பிச்சென்ற முத்துமணியை காவலர் ஒருவர் விரட்டிப் பிடித்து தெப்பக்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு காவலர்கள் அவரைத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'நீட் ஆள்மாறாட்டம்: சென்னை மருத்துவ மாணவன் கைது விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட ஒருவர் கைது!'

Last Updated : Aug 2, 2021, 9:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.