ETV Bharat / city

அரசின் முடிவு மக்களுக்கானதாக இருக்க வேண்டும் - தமிழிசை - puducherry

அரசு எடுக்கும் முடிவு மக்களுக்கான முடிவாக இருக்க வேண்டும் என்பது தனது வேண்டுகோள் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன், tamilisai soundarajan
தமிழிசை சௌந்தரராஜன்
author img

By

Published : Oct 11, 2021, 9:06 AM IST

மதுரை: மதுரை மாவட்டத்தில் நடைபெறும் சிலம்பாட்டப் போட்டியில் சிறப்பு விருந்தினராகப் பங்கு பெறுவதற்காக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய அவர், "கரோனா தொற்றுப் பரவல் குறைந்துவரும் சூழ்நிலையில், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறோம். அனைவரும் கரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளுங்கள்.

தடுப்பூசி போடுங்கள்

முழுமையாக இன்னும் கரோனா தொற்றுப் போகவில்லை. மதுரையில் கரோனா தடுப்பூசி 60 விழுக்காடு மட்டுமே போடப்பட்டுள்ளது. அதிகமானோர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே மூன்றாவது அலையைத் தடுக்க முடியும்.

அனைவரும் தானாக முன்வந்து முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். அதிகமான தடுப்பூசி செலுத்தினால்தான் இயல்பான நிலைக்குத் திரும்ப முடியும்" என்றார்.

தமிழ்நாடு வேறு; புதுச்சேரி வேறு

புதுச்சேரியில் இரவு நேரங்களில் வெளியூரிலிருந்து வரும் பெண்களை காவலர்கள் பாதுகாத்து அழைத்துச் செல்வதுபோல், தமிழ்நாட்டிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படுமா என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, "புதுச்சேரியில் வேறுவிதமாக அணுகுகிறோம், தமிழ்நாட்டில் அது வேறு விதம்.

அப்படிப் பார்த்தால் புதுச்சேரியில் அனைத்துக் கோயில்களும் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது.

கடந்த முறை மதுரைக்கு வந்தபோது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு என்னால் செல்ல முடியவில்லை, அரசு ஒரு முடிவு எடுக்கிறது என்றால் அது மக்களுக்கான முடிவாக இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்" எனப் பதிலளித்தார்.

இதையும் படிங்க: 'அதிமுகவில் சில மாற்றங்கள் செய்வது அவசியம்' - செல்லூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.