ETV Bharat / city

சத்துணவுத் திட்டம் மாற்றங்களோடு தொடரணும் - ஆசிரியர்கள் வேண்டுகோள் - Madurai Latest News

கரோனா காலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளி மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு அடையாமல் தடுக்கும் மாற்றங்களோடு சத்துணவுத் திட்டம் தொடர வேண்டும் என இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

சத்துணவுத் திட்டம்
சத்துணவுத் திட்டம்
author img

By

Published : Jul 1, 2021, 8:09 PM IST

மதுரை: தமிழ்நாட்டில் கல்வி கற்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரால் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குப் பின்பு இத்திட்டம் 1982ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரால் சத்துணவுத் திட்டமாகப் புதிய மாற்றம் கண்டது.

அவர்களுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட பலராலும் இன்றுவரை, இந்தத் திட்டம் பல்வேறு கூடுதல் அம்சங்களோடு தொடர்ச்சியாக மெருகேற்றப்பட்டுவந்தது.

மெருகேற்றப்பட்ட திட்டம்

கல்வி கற்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் பின்னாளில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும்விதமாக மீண்டும், மீண்டும் கூடுதல் மாற்றங்கள் செய்யப்பட்டன. மதிய உணவுத் திட்டமாக அறிமுகமான போதும், பிறகு கூடுதலாக முட்டை, பயறு வகைகள், உருளைக்கிழங்கு, வாழைப்பழம், கலவை சாதம் எனத் தொடர் மாற்றங்களை இத்திட்டம் கண்டுகொண்டே வந்தது.

திட்ட நோக்கங்கள்

  • இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக, ஆரம்பக் கல்வியில் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரித்தல்,
  • இடைநிற்றலை குறைத்தல்,
  • வறுமையால் வாடும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தினை உறுதிசெய்தல்,
  • ஏழ்மையில் வாடும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பள்ளி வருகையை ஊக்குவித்தல்,
  • முறையான கல்வி பெற உதவுதல்,
  • பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குதல் ஆகியவையே ஆகும்.

கரோனா கால சிக்கல்

தற்போது நிலைமையே வேறு. கரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் இயங்காத நிலையில் வறுமையால் வாடும் குழந்தைகள் உணவு உண்பதை தமிழ்நாடு அரசு எவ்வாறு உறுதிசெய்கிறது?

இது குறித்து மதுரை அரசரடி அருகேயுள்ள ராஜம் வித்யாலயா பள்ளி இடைநிலை ஆசிரியர் சுலைகா பானு பேசுகையில், ”கரோனா காலத்தில் பள்ளி குழந்தைகளுக்காக நமது அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டுவருகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில்தான் சத்துணவுத் திட்டம் மிகச் சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுவருகிறது.

அரசு உத்தரவு

கரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்தாண்டு முதல் பள்ளிகள் இயங்கவில்லை. இதனைக் கருத்தில்கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் குழந்தைகளின் ஊட்ட உணவை உறுதிசெய்யும் நோக்கிலான உத்தரவை தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

அதன்படி குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் அரிசி, பருப்பு, முட்டை ஆகியவை பள்ளிகள் மூலமாகவே, குழந்தைகளின் குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டன.

இது குறித்து கிராமப்புற பெற்றோருக்கு தகவல் அளிக்க முடியாத நிலையிலும், ஆசிரியர்களே நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கிய நிகழ்வும் நடந்துள்ளன. பொதுவாக மே மாதம் கோடைகால விடுமுறை என்பதால், இத்திட்டத்திற்கு பள்ளி இயங்குகிற ஆண்டில் இந்த ஒரு மாதம் மட்டும் விதிவிலக்காகும்.

இடர்ப்பாடுகளை களைக

கரோனா காலத்தில் நிறைய குழந்தைகள் பள்ளி அமைந்திருக்கும் இடத்திலிருந்து, வெகு தொலைவில் அமைந்துள்ள தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பியிருக்கின்றனர். ஆகையால், ஊட்டச்சத்துப் பொருள்கள் குழந்தைகளைச் சென்றடைவதில் பெரும் இடர்ப்பாடு உள்ளது; பல நேரங்களில் குழந்தைகளிடம் சேராமலே வீணாகின்றன.

இதைக் கணக்கில்கொண்டு தமிழ்நாடு அரசு, கூடுதல் அக்கறை எடுக்க வேண்டும். சத்துணவுத் திட்டத்தைப் பொறுத்தவரை அதன் முழுப்பயனும் மாணவர்களைச் சென்றடைய காரணிகளாக உள்ள இடர்ப்பாடுகளை களைய வேண்டும்” என்றார்.

ஊட்டச்சத்தை உறுதிப்படுத்துக

கரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் உணவு மட்டுமன்றி, சரிவிகித ஊட்டச்சத்தையும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை அரசுக்கு உள்ளது.

இது குறித்து மதுரை ஒத்தக்கடையில் அமைந்துள்ள கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் மோசஸ் மங்கல ராஜ் பேசுகையில், ”பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் காலத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தினை மிகச்சரியாக உறுதிசெய்தோம்.

தற்போதைய சூழலில் இயன்றவரை முயற்சி மேற்கொண்டுவருகிறோம். அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்டவற்றை குழந்தைகளின் பெற்றோருக்கு நேரடியாக வழங்குவதை உறுதிசெய்கிறோம்.

இலவச முகக்கவசம் தருக

கரோனா காலகட்டத்தில் நிறைய பள்ளிக் குழந்தைகள் முகக்கவசம் அணியாமல் தெருவில் நடமாடுவதையும், விளையாடுவதையும் இயல்பாகக் காண முடிகிறது. முகக்கவசம்கூட வாங்க முடியாமல், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இன்றளவும் பயில்கின்றனர் என்பதைக் கருத்தில்கொண்டு, பள்ளி குழந்தைகளுக்குத் தமிழ்நாடு அரசு தரமான முகக்கவசம் வழங்க வேண்டும்” என்றார்.

இன்றைய குழந்தைகளே, நாளைய தலைவர்கள் என்பதைக் கருத்தில்கொண்டு அவர்களின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.

ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை

அதேசமயம் கரோனா சூழலைப் பயன்படுத்தி, 'எரிகிற வீட்டில் பிடுங்கும்வரை லாபம்' என்னும் நோக்கில், குழந்தைகளின் ஊட்டச்சத்து தொடர்பான விஷயத்தில் கொள்ளையடிக்க முயலும் ஊழல் பெருச்சாளிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம் என்பதை அரசு கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும்.

இதையும் படிங்க: குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்களை ஆய்வுசெய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.