ETV Bharat / city

"நான் தான் பொம்மை பேசுறேன்" - விழிப்புணர்வு பாடம் நடத்தும் ஆசிரியர் - Sexual Awareness in Madurai

மதுரை: பாலியல் வன்கொடுமை வலுப்பெற்று வருவதால், அதற்கான விழிப்புணர்வை பொம்மலாட்டம் கலை மூலம் பள்ளியில் மட்டுமல்லாது, பல்வேறுப் பகுதிகளிலும் ஏற்படுத்தி வருகிறார், ஆசிரியர் சரவணன்.

ஆசிரியர் சரவணன்  பேட்டி
ஆசிரியர் சரவணன் பேட்டி
author img

By

Published : Dec 8, 2019, 8:27 PM IST

நாளுக்கு நாள் அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் இருந்து வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் பற்றி பாடம் எடுக்க வேண்டிய கட்டாயம் உருவானது. இந்த நேரத்தில் பாலியல் சுரண்டலைப் பற்றி, பள்ளியைத் தாண்டி குடியிருப்புப் பகுதிகளிலும் விழிப்புணர்வு பாடம் நடத்தி வருகிறார் ஆசிரியர் சரவணன். மதுரையில் உள்ள திருஞானம் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியரியராகப் பணியாற்றி வரும் இவர், தனது விழிப்புணர்வு பாடத்தில் பொம்மைகளை பாடவும் பேசவும் வைக்கிறார்.

அதாவது பொம்மலாட்டம் மூலமாக பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தனது பள்ளியைச் சார்ந்த மாணவ-மாணவியர் வாழும் பகுதிகளுக்குச் சென்று பெண் கல்வி, இளவயது திருமணம், பாலியல் சுரண்டல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பொம்மலாட்டம் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவருடன் அந்தப் பள்ளியின் ஆசிரியர்களும் கைகோர்த்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை கரும்பாலைப் பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரசாரத்திற்குப் பிறகு, ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி ஊடகத்திற்குப் பேட்டி அளித்தார்.

ஆசிரியர் சரவணன் பேட்டி

அப்போது பேசிய அவர், " இது போன்ற விழிப்புணர்வு பிரசாரத்தை இதற்கு முன் தெரு நாடகங்கள் மூலமாக செய்து கொண்டிருந்தேன். தற்போது ஹைதராபாத் சென்று பொம்மலாட்ட பயிற்சி எடுத்து வந்ததற்குப் பிறகு, எனது வகுப்பிலேயே பொம்மலாட்டம் மூலமாகவே மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறேன். அதே யுக்தியை பயன்படுத்தி எங்களது பள்ளி மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு பாலியல் சுரண்டல், இளவயது திருமணம், பெண் கல்வி, ஆகியவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன் அதுகுறித்த பாதிப்புகளையும் பொம்மலாட்டம் மூலம் விளக்கி வருகிறேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பொம்மலாட்டம் மூலமாக ஒரு கருத்தை விளக்கிக் கூறும் போது மாணவ மாணவியரின் கவனம் சிதறாமல் ஒரு முகப்படுகிறது. இதற்குத் தேவையான பொம்மைகளை குழந்தைகளையே செய்ய வைத்து, அவர்கள் மூலமாகவே இந்த விழிப்புணர்வு நாடகங்களையும் நடத்தி வருகிறோம். இதுபோன்ற யுக்தியின் மூலமாக பாடங்களை மிக எளிதாக மாணவர்களுக்குக் கற்பிக்க முடியும். இதனை அனைத்து ஆசிரியர்களும் கற்றுக்கொண்டு இந்த முயற்சியைப் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.

பொம்மலாட்டம் மூலம் பாலியல் விழிப்புணர்வு

பொம்மலாட்டத்தில் நிகழ்த்திய மாணவர்கள் காளீஸ்வரன் மற்றும் நாகலட்சுமி ஆகியோர் கூறுகையில், பொம்மலாட்டக் கலையை கற்றுக் கொண்டு, பாலியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் அதே விழிப்புணர்வுடன் நாங்களும் செயல்படுவதற்கு உத்வேகம் அளிக்கிறது என்றும் தெரிவித்தனர்.

இவர்களின் இந்தப் பயணம் பாலியல் சுரண்டலிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அழியும் தருவாயில் இருக்கும் நாட்டுப்புறக்கலையான பொம்மலாட்டம் கலையை மீட்டெடுக்கும் பணியையும் மேற்கொள்கிறது.

இதையும் படிங்க:

"வயது தடையில்லை... இங்கு வந்து படிக்கலாம்" - வரவேற்கும் பள்ளி

Intro:பொம்மலாட்டம் மூலம் குழந்தைகளிடம் விழிப்புணர்வு - அசத்தும் ஆசிரியர்

பொம்மலாட்டம் மூலம் பாலியல் கல்வி குழந்தை கல்வியின் அவசியம் உள்ளிட்ட கருத்தியல் சார்ந்து தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் மதுரையை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சரவணன்.
Body:பொம்மலாட்டம் மூலம் குழந்தைகளிடம் விழிப்புணர்வு - அசத்தும் ஆசிரியர்

பொம்மலாட்டம் மூலம் பாலியல் கல்வி குழந்தை கல்வியின் அவசியம் உள்ளிட்ட கருத்தியல் சார்ந்து தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் மதுரையை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சரவணன்.

மதுரையில் உள்ள திருஞானம் துவக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் சரவணன் பொம்மலாட்டம் மூலமாக பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

தனது பள்ளியைச் சார்ந்த மாணவ-மாணவியர் வாழும் பகுதிகளுக்குச் சென்று பெண்கல்வி இளவயது திருமணம் பாலியல் சுரண்டல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு பொம்மலாட்டம் மூலமாக ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் உடன் அந்த பள்ளி ஆசிரியர்களும் இணைந்து இப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை கரும்பாலை பகுதியில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பிறகு ஈடிவி பாரத் செய்து ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை இதற்கு முன்னால் தெரு நாடகங்கள் மூலமாக செய்து கொண்டிருந்தேன். தற்போது ஹைதராபாத் சென்று பொம்மலாட்ட பயிற்சி எடுத்து வந்ததற்குப் பிறகு எனது வகுப்பிலேயே பொம்மலாட்டம் மூலமாகவே மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறேன்.

அதே உத்தியை பயன்படுத்தி எங்களது பள்ளி மாணவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு பாலியல் சுரண்டல் இளவயது திருமணம் பெண் கல்வி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன் அதுகுறித்த பாதிப்புகளையும் பொம்மலாட்டம் மூலம் விளக்கி வருகிறேன்.

பொம்மலாட்டம் மூலமாக ஒரு விஷயத்தை விளக்கி கூறும் போது மாணவ மாணவியரின் கவனம் சிதறாமல் ஒருமுகப்படுகிறது. இதற்கு தேவையான பொம்மைகளை குழந்தைகளையே செய்ய வைத்து அவர்கள் மூலமாகவே இந்த விழிப்புணர்வு நாடகங்களை நாங்கள் நடத்தி வருகிறோம்

இதுபோன்ற உத்தியின் மூலமாக பாடங்களை மிக எளிதாக மாணவர்களுக்கு கற்பிக்க முடியும் இதனை அனைத்து ஆசிரியர்களும் கற்றுக்கொண்டு இந்த முயற்சியை பின்பற்ற வேண்டும் என்றார்

பொம்மலாட்டத்தில் நிகழ்த்திய மாணவர்கள் காளீஸ்வரன் மற்றும் நாகலட்சுமி ஆகியோர் கூறுகையில், பொம்மலாட்டக் கலையை கற்றுக் கொண்டு பாலியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் மகிழச்சியாக உள்ளது. அதே விழிப்புணர்வு டன் நாங்களும் செயல்படுவதற்கு உத்வேகம் அளிக்கிறது என்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.