ETV Bharat / city

ஆயிரக்கணக்கில் புத்தகங்களை கொடையாக வழங்கிய ஆசிரியை - மதுரையைச் சேர்ந்த ஆசிரியை அர்ச்சனா புத்தகம் வழங்கினார்

மதுரை: நூல்கொடை என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி அரசு பள்ளிகளுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கி வருகிறார் மதுரையைச் சேர்ந்த ஆசிரியை அர்ச்சனா.

Teacher
Teacher
author img

By

Published : Nov 27, 2019, 9:25 PM IST

மதுரையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரியும் அர்ச்சனா என்பவர், அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று நூல்கள் வழங்கி வருகிறார் இதுவரை 25 அரசு பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2000 நூல்களை வழங்கியுள்ளார்.

Teacher
Teacher

மதுரை திருமலை நாயக்கர் மஹால் அருகே உள்ள மாநகராட்சி திருவள்ளுவர் உயர்நிலைப்பள்ளியில் இன்று நூல் கொடை வழங்கும் விழா நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் 100க்கும் மேற்பட்ட நூல்களை அர்ச்சனா கொடையாக வழங்கினார்.

நூல்கொடை விழா

இது தொடர்பாக ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், பள்ளி கல்லூரிகளில் உள்ள மாணவ மாணவியருக்கு தங்களது கல்வி நிலையங்களில் உள்ள நூலகங்கள் குறித்து தெரிவதில்லை. இந்த அனுபவம் எனக்கு நேரடியாக உண்டு என்பதால் தான் இந்த நூல் கொடை திட்டம்.

மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை கொண்டு வர வேண்டும். குறிப்பாக அதனை தொடக்கப்பள்ளி அளவிலேயே கொண்டு வருவதற்கான எண்ணம் அப்போதுதான் உதயமானது. இதன் தாரக மந்திரம் 'நூல் கொடுப்போம் நூலகம் அமைப்போம்' என்பதுதான். இதற்காக எனது நண்பர்கள், மாணவர்களிடம் உதவி பெற்று அரசு பள்ளிகளில் நூலகத்தை ஏற்படுத்தும் முயற்சியை தொடங்கினேன்.

பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியை அர்ச்சனா

நூல்கள் அனைத்துமே கதைப் புத்தகங்களாகவே வழங்குகிறேன் அப்போதுதான் மாணவர்கள் ஆர்வமாக வாசிக்க தொடங்குவார்கள். மதுரை நகர் புறத்திலும் மதுரை சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளிலும் நூலகங்களை உருவாக்க தொடர்ந்து நூல்கொடை திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம், என்றார்.

தலைமை ஆசிரியர் சௌந்தரபாண்டியன்

மாநகராட்சி திருவள்ளுவர் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சௌந்தரபாண்டியன் கூறுகையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை ஒவ்வொரு பள்ளிக்கும் பாடம் சார்ந்த நூல்களை வழங்குகிறது. ஆனால் அதைத்தாண்டி நன்னெறி போதிக்கிற கதை புத்தகங்கள் ஆசிரியை அர்ச்சனா போன்ற தன்னார்வலர்களிடமிருந்து நாங்கள் பெற்றுக் கொள்கிறோம்.

கதைகளைப் படிக்கும் மாணவர்கள் அந்த கதைகளை திரும்ப எங்களிடம் சொல்ல சொல்லி ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்த முடிகிறது, என்றார்.

Intro:25 பள்ளிகள் 2 ஆமிரம் புத்தகங்கள் - நூல் கொடை வழங்கிய ஆசிரியை

நூல்கொடை என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி அரசு பள்ளிகளுக்கு புத்தகங்களை தானமாக வழங்கி வருகிறார் மதுரையைச் சேர்ந்த ஆசிரியை அர்ச்சனா.Body:25 பள்ளிகள் 2 ஆமிரம் புத்தகங்கள் - நூல் கொடை வழங்கிய ஆசிரியை

நூல்கொடை என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி அரசு பள்ளிகளுக்கு புத்தகங்களை தானமாக வழங்கி வருகிறார் மதுரையைச் சேர்ந்த ஆசிரியை அர்ச்சனா.

மதுரையில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் ஆசிரியையாக பணிபுரியும் அர்ச்சனா அரசு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று நூல்கள் வழங்கி அங்கே நூலகங்கள் அமைக்க பேருதவி புரிந்து வருகிறார் இதுவரை 25 அரசு பள்ளிகளுக்கு ஏறக்குறைய ஒரு லட்சம் மதிப்புள்ள 2000 நூல்களை வழங்கி அசத்தியுள்ளார்.

மதுரை திருமலை நாயக்கர் மஹால் அருகே உள்ள மாநகராட்சி திருவள்ளுவர் உயர்நிலைப்பள்ளியில் இன்று நூல் கொடை வழங்கும் விழா நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை தானமாக வழங்கினார்.

ஈடிவி பாரத் செய்து ஊடகத்திற்கு அர்ச்சனா தெய்வா வழங்கிய நேர்காணலில், பள்ளி கல்லூரிகளில் உள்ள மாணவ மாணவியருக்கு தங்களது கல்வி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள நூலகங்கள் குறித்து பொதுவாக தெரிவதில்லை. இந்த அனுபவம் எனக்கு நேரடியாக உண்டு. ஆகையால் அப்போது பிறந்ததுதான் இந்த நூல் கொடை திட்டம்.

மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை கொண்டு வர வேண்டும் குறிப்பாக அதனை தொடக்கப்பள்ளி அளவிலேயே கொண்டுவருவதற்கான எண்ணம் அப்போதுதான் உதயமாகியது. இதன் தாரக மந்திரம் 'நூல் கொடுப்போம் நூலகம் அமைப்போம்' என்பதுதான். இதற்காக எனது நண்பர்கள் என்னிடம் பயின்ற மாணவர்கள் அனைவரிடமும் உதவி பெற்று அரசு பள்ளிகளில் நூலகத்தை ஏற்படுத்தும் முயற்சியைத் தொடங்கினேன்.

கொடுக்கின்ற நூல்கள் அனைத்துமே கதைப் புத்தகங்கள் ஆகவே வழங்குகிறேன் அப்போதுதான் மாணவர்கள் அதனை ஆர்வமாக வாசிக்க தொடங்குகிறார்கள். சிறிது சிறிதாக வாசிப்பு பழக்கத்தை கொண்டு வந்தவுடன் அவர்களின் துறை சார்ந்த நூல்களை வாசிக்க ஊக்கப்படுத்துகிறேன்.

நூல்களை வழங்கியதற்கு பிறகு தொடர்ச்சியாக அந்தந்த பள்ளிகளுக்கு சென்று மாணவர்களோடு கலந்துரையாடி என்ன வாசித்து இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவும் முயற்சிக்கிறேன். மதுரை நகர் புறத்திலும் மதுரை சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளிலும் நூலகங்களை உருவாக்க தொடர்ந்து நூல்கொடை திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் என்றார்

மாநகராட்சி திருவள்ளுவர் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சௌந்தரபாண்டியன் கூறுகையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஒவ்வொரு பள்ளிகளுக்கும் பாடம் சார்ந்த நூல்களை வழங்கு கிறது. ஆனால் அதைத்தாண்டி நன்னெறி போதிக்கின்ற கதைப் புத்தகங்கள் அர்ச்சனா போன்ற தன்னார்வலர்களிடமிருந்து நாங்கள் பெற்றுக் கொள்கிறோம்.

தொலைக்காட்சி செல்பேசி என தங்களது பொன்னான நேரங்களை மாணவர்கள் வீணாக்கும் நிலையை இதுபோன்ற வாசிப்பு பழக்கங்களே மாற்றுகின்றன. கதைகளைப் படிக்கும் மாணவர்கள் அந்த கதைகளை திரும்ப எங்களிடம் சொல்ல சொல்லி ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்த முடிகிறது என்றார்

இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா மாணவர்களுக்கு நூல்களை வழங்கி சிறப்பித்தார். நாடகாசிரியர் செல்வம் நன்னெறி சார்ந்த போதனைகளை நாடகத்தின் மூலமாக மாணவர்களையே நடிக்க வைத்து செயல்படுத்தி காட்டினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.