தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் கொந்தகை அகழாய்வுக் களத்தில் முதுமக்கள் தாழிகளும் முழுமையான மனித எலும்புக்கூடுகளும் கிடைத்தன.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கதிரேசன் என்பவர் தனது நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக நிலத்தைத் தோண்டியபோது அங்கும் சில முதுமக்கள் தாழிகளும் மண்டை ஓடுகளும் கிடைத்தன. இதனையடுத்து தமிழ்நாடு தொல்லியல் துறை தற்போது குறிப்பிட்ட இடத்தில் மேலும் ஆறு குழிகளைத் தோண்டி அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. முதுமக்கள் தாழிகள், குறியீடுகளைக் கொண்ட கறுப்பு, சிவப்பு நிற மண்பானை ஓடுகள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. மேலும் மிகப்பெரிய முதுமக்கள் தாழி ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து விரிவாக்கப்பட்ட கொந்தகை அகழாய்வுப் பணிகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளதாகவும், தேவைப்பட்டால் மேலும் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தொல்லியல் துறை தரப்பில் கூறப்பட்டது.
இதையும் படிங்க....க்ரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்ய வேண்டும் - ஸ்டாலின்