நாடு முழுவதும் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் அக்டோபர் 2ஆம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தியடிகளின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக பிறந்த நாள் விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர், எழுத்தாளர் சு.வெங்கடேசனும் கண்டித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடத்த வேண்டிய மலரஞ்சலி நிகழ்வை கரோனாவை காரணங்காட்டி ரத்து செய்துள்ளது மத்திய அரசு.
இன்னும் செய்யுங்கள். ஆனால், காலம் அநீதியின் கைகளில் என்றென்றும் கட்டுண்டு கிடந்ததாக வரலாறும் இல்லை; புராணங்களும் இல்லை “ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து