ETV Bharat / city

கூட்டு வட்டி தள்ளுபடி - நிதி அமைச்சர் நிர்மலாவுக்கு கடிதம்! - நிர்மலா சீதாராமன்

கூட்டு வட்டியை கைவிடும் அறிவிப்பு வங்கி அல்லா நிதி நிறுவனங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

sitaraman
sitaraman
author img

By

Published : Oct 6, 2020, 12:43 PM IST

மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய நிதித்துறை நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ கடன் தள்ளி வைப்பு காலத்திற்கான இஎம்ஐ தவணைகள் மீது வட்டிக்கு வட்டி போடப்படுமென மத்திய அரசு அறிவித்திருந்தது. இது பேரிடரால் பெரும் துயருக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. தற்போது உச்ச நீதிமன்ற தலையீட்டால் இக்கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசு முன் வந்திருப்பது மகிழ்ச்சி. அரசு ’கஜேந்திர சர்மா (எ) மத்திய அரசு’ வழக்கில் இது குறித்து சமர்ப்பித்துள்ள வாக்கு மூலத்தில் ரூ.2 கோடி ரூபாய் வரையிலான கடன்கள் மீது வட்டிக்கு வட்டி விதிப்பை திரும்பப் பெறுவதாக கூறியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

எல்லாக் கடன்களுக்கும் ஒரே வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆழமான நெருக்கடியை விட்டு மீண்டு வர உதவுமா என்ற கவலையை குறு சிறு நடுத்தர தொழிலதிபர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஆகவே எல்லா குறு சிறு நடுத்தர தொழில்களுக்கும் இத்தள்ளுபடி விரிவடைகிற வகையில் வரம்பு உயர்த்தப்பட வேண்டும். இம்முடிவு எல்லா வகையான நிதி நிறுவனங்களையும் அதாவது, வங்கி அல்லா நிதி நிறுவனங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதற்குரிய வகையில் அரசின் அறிவிப்புகள் தெளிவாக அமைய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: நிலக்கரி சுரங்க முறைகேடு: முன்னாள் மத்திய அமைச்சர் குற்றவாளி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.