விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி மைதானம் நந்தவன தெருவைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை சாந்தி. இவரின் மகள் விதாசினி (19) மதுரையில் உள்ள சமூக அறிவியல் கல்லூரியில், சமூக பணித்துறை முதலாமாண்டு பயின்று வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த விதாசினிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த 4ஆம் தேதி மதுரையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது மாணவிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இருப்பினும், அவருக்கு ரத்த வெள்ளை அணுக்கள் குறைய தொடங்கியதால் சிறுநீரகம், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகள் செயலிழந்தன. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
டெங்கு காய்ச்சலால் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சேலத்தில் டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு