ETV Bharat / city

11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் இந்தாண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

11 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

author img

By

Published : Jul 30, 2021, 10:52 PM IST

மதுரையைச் சேர்ந்த வாசுதேவா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த பொதுநல மனுவில், "2020-21ஆம் ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வில் தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், திண்டுக்கல் உள்பட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கலந்தாய்வுப் பட்டியலில் சேர்க்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு 2019 செப்டம்பர் மாதம் அறிவித்தது.

மேலும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நடைபெறக்கூடிய மருத்துவக் கலந்தாய்வில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கலந்தாய்வுப் பட்டியலில் சேர்த்தால், மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீடு விழுக்காடு அதிகரிக்கும்.

இதனால் பல மாணவர்கள் பயனடைவார்கள். எனவே 2020-21ஆம் ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவக் கலந்தாய்வில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்க்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு, "வழக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் மனுதாரர் புதிதாகத் தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டடங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளைத் தமிழ்நாடு அரசு விரைவாகச் செய்து முடிக்க வேண்டும்.

அப்போதுதான் தேசிய மருத்துவக் கல்விக் கழகத்தின் அனுமதி பெற இயலும். 2021-22ஆம் கல்வி ஆண்டில் புதிதாகத் தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்கள் வீதம் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்" எனக்கூறி வழக்கை முடித்துவைத்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.