ETV Bharat / city

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை
author img

By

Published : Apr 8, 2019, 3:12 PM IST

மதுரை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது மீனாட்சி அம்மன் கோயில்தான். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கோயிலின் சித்திரை திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

அந்த வகையில், இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா இன்று மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கரு முத்து கண்ணன் தலைமையில், இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் மதுரை, திண்டுக்கல் உட்பட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இன்று முதல் 10 நாட்களும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை ஒவ்வொரு அலங்காரத்தில் வலம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
இதன் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் 15ஆம் தேதியும், 17ஆம் தேதி திருக்கல்யாணமும், 18ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் மதுரை மாநகரில் பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

வெங்கடேஷ்வரன்
மதுரை
08.04.2019

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.

மதுரை என்றாலே நினைவுக்கு வருவது ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில். ஒவ்வொரு மாதமும் திருவிழா தான்.
அதில் மிகவும் உலகபிரசித்தி பெற்றது சித்திரை திருவிழா.
தமிழகம் உட்பட வெளி மாநிலங்களிலிருந்து லட்சகணக்கான பக்தர்கள் கூடுவர்.
அந்த வகையில் இந்தாண்டு 10 நாட்கள்சித்திரை திருவிழா இன்று மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் கரு முத்து கண்ணன் தலைமையில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வர் பிரியாவிடை சுவாமி அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் தீபராதனைகள் செய்து இன்று கொடியேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மதுரை, திண்டுக்கல் உட்பட சுற்று பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
இன்று முதல் 10 நாட்களும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை ஒவ்வொரு அலங்காரத்தில் வலம் வரும்.
இதன் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் 15ந் தேதியும், 17ந் தேதி திருக்கல்யாணமும், 18ந் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறும்.
திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் மதுரை மாநகரில் பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.