ETV Bharat / city

Special train for Pithuru pooja: தை அமாவாசையை முன்னிட்டு கயாவுக்கு சுற்றுலா ரயில் - ஷீரடிக்கும் செல்ல ஏற்பாடு - கயாவில் தை அமாவாசை பித்ரு பூஜைக்கு சுற்றுலா ரயில்

Special train for Pithuru pooja: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் முன்னோர்களுக்கு தை அமாவாசை அன்று பித்ரு பூஜை செய்ய மதுரையிலிருந்து கயா வரை ஒரு சுற்றுலா ரயிலை இயக்க இருக்கிறது என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

special train for pithuru pooja to shirdi  madurai railways arranged  ஷீரடி சுற்றுலா ரயில்  thai ammavasai  கயாவில் தை அமாவாசை பித்ரு பூஜைக்கு சுற்றுலா ரயில்  துரையிலிருந்து கயா வரை ஒரு சுற்றுலா ரயில்
special train for pithuru pooja to shirdi
author img

By

Published : Dec 19, 2021, 11:10 PM IST

மதுரை: (Special train for Pithuru pooja): இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வரும் தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்ய செல்பவர்களுக்கு மதுரையிலிருந்து கயா வரை, ஒரு சுற்றுலா ரயிலை இயக்க இருப்பதாக மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மதுரை ரயில்வே கூட்டம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் முன்னோர்களுக்கு தை அமாவாசை அன்று பித்ரு பூஜை செய்ய மதுரையிலிருந்து கயா வரை ஒரு சுற்றுலா ரயிலை இயக்க இருக்கிறது.

ரயில் வழித்தடம்

இந்த சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து 2022ஆம் ஆண்டு ஜனவரி 22 அன்று புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல் வழியாக கயா சென்று சேரும்.

வழியில் கொல்கத்தாவில் உள்ளூர் சுற்றுலா தலங்களான காளி தேவி, காமாக்யா தேவி, காசி விசாலாட்சி, கயாவில் உள்ள மங்கள கௌரி, அலகாபாத்தில் உள்ள அலோபிதேவி பூரியிலுள்ள பிமலாதேவி போன்ற 5 சக்தி பீடங்களையும், திரிவேணி சங்கமம், கொனார்க் சூரியநாதர் கோயில் மற்றும் அருகிலுள்ள ஆலயங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு கயாவில் முன்னோர்களுக்குப் பித்ரு பூஜை செய்து கடைசியாக விஷ்ணு பாதத்தை தரிசிக்க வைத்துவிட்டு, மதுரை திரும்பும்படி 13 நாட்கள் பயணிகளுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டண விவரம்

இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி ரயில் கட்டணம், உணவு, உள்ளூர் போக்குவரத்து, தங்குமிட கட்டணம், பயணக் காப்பீடு உட்பட நபர் ஒருவருக்கு ரூபாய் 12,885 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த சுற்றுலாவுக்கான பயணச்சீட்டுகளை www.irctctourism.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது மதுரை அலுவலக எண் 8287931977-ஐ தொடர்பு கொள்ளலாம். இரண்டு தடுப்பு ஊசிகள் செலுத்தியவர்கள் மட்டுமே சுற்றுலாவில் அனுமதிக்கப்படுவர்.

ஷீரடி சுற்றுலா ரயில்

இதனையடுத்து சீரடி, பண்டரிபுரம், மந்திராலயம், சனி சிங்னாப்பூர் பாரத தரிசன சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து வருகிற டிசம்பர் 24அன்று புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக சென்று ஷீரடி சாய்பாபா, பண்டரிபுரம் பாண்டுரங்கன், மந்த்ராலயம் ராகவேந்திரர், சனி சிங்னாபூர் சுயம்பு சனீஸ்வரர் ஆலயங்கள் ஆகியவற்றை தரிசித்து திரும்பும்படி ஏழு நாட்கள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரயில் கட்டணம், உள்ளூர் பேருந்து, உணவு தங்குமிடம் உட்பட நபர் ஒருவருக்கு ரூபாய் 7,060 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதையும் படிங்க:பொற்கோவிலில் இளைஞர் அடித்துக் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.