மதுரை: மதுரையில் தவிட்டு சந்தை, மஹால் உள்ளிட்ட பகுதிகளில் சௌராஷ்டிரா இனத்தைச் சார்ந்த குடும்பங்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்து மதத்தை தாய்மதமாக கொண்டவர்கள். இந்நிலையில், சில கிறிஸ்தவ அமைப்புகள் சௌராஷ்டிரா மொழியில் பைபிளை மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளனர். கிறிஸ்தவ அமைப்புகள் சௌராஷ்டிரா மொழியில் பைபிளை மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டிருப்பதை கண்டித்து நேற்று (மே 1) சௌராஷ்டிரா அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான சௌராஷ்ட்ரா இனத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சௌராஷ்டிரா மொழியில் பைபிளை மொழி பெயர்ப்பு செய்து, அறியாமையில் உள்ள சில சௌராஷ்டிரா இனத்தை சேர்ந்தவர்களை மதம் மாற்றம் செய்ய முயல்வதாக குற்றஞ்சாட்டினர். . இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சமஸ்கிருதத்தில் உறுதி மாெழி ஏற்ற விவகாரம்: காத்திருப்பு பட்டியலில் டீன்!