ETV Bharat / city

அம்பேத்கர் உருவப்படத்தின் மீது பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு: சமூக விரோதிகள் அட்டூழியம் - அம்பேத்கர் சிலை உடைப்பு

மதுரை: மேலூர் அருகே அம்பேத்கர் உருவப்படத்தில் பெயிண்ட் ஊற்றி சமூக விரோதிகள் சிலர் அவமரியாதை செய்ததால் அப்பகுதி மக்கள் அவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ambedkar photo contempt
author img

By

Published : Oct 8, 2019, 2:03 PM IST

Updated : Oct 8, 2019, 3:13 PM IST

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது அட்டபட்டி. இங்கு அம்பேத்கர் நினைவாக சுவரில் அவரது உருவப்படம் வரையப்பட்டுள்ளது. இதன் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் உருவப்படமும் வரையப்பட்ட இரும்புப்பலகையும் உள்ளது.

இவை இரண்டிலும் நேற்றிரவு சில சமூக விரோதிகள் வெள்ளை பெயிண்ட் அடித்து அவமதிப்பு செய்துள்ளனர். காலையில் இதனைக் கண்ட பொதுமக்கள், சாலைகள் நடுவே கற்கள், முட்களைப் போட்டு மறியல் செய்தனர். இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த மேலூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சுபாஷ், கீழவளவு காவல் துறையினர் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய பேச்சுவார்த்தையில், இன்று மாலைக்குள் உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும், அவமதிப்பு செய்யப்பட்டப் படத்திற்குப் பதிலாக மாற்றுப் படம் வரையப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்ததையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

Intro:மதுரை அருகே அம்பேத்கர் உருவப் படத்தில் மீது பெயிண்ட் ஊற்றி அவமதித்த விஷமிகள் - பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அம்பேத்கர் உருவப் படத்தில் பெயிண்ட் ஊற்றி விஷமிகள் சிலர் அவமரியாதை செய்து உள்ளதால் அப்பகுதி மக்கள் அவர்களை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Body:மதுரை அருகே அம்பேத்கர் உருவப் படத்தில் மீது பெயிண்ட் ஊற்றி அவமதித்த விஷமிகள் - பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அம்பேத்கர் உருவப் படத்தில் பெயிண்ட் ஊற்றி விஷமிகள் சிலர் அவமரியாதை செய்து உள்ளதால் அப்பகுதி மக்கள் அவர்களை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது அட்டபட்டி. எங்க அம்பேத்கர் நினைவாக சுவர் மற்றும் அவரது உருவப்படம் வரையப்பட்டுள்ளன. இதன் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் உருவப்படமும் வரையப்பட்ட இரும்பு பலகை ஒன்றும் உள்ளது.

இவற்றில் நேற்று இரவு சில சமூக விரோத சக்திகள் அம்பேத்கர் மற்றும் திருமாவளவன் படங்கள் மீது வெள்ளை பெயிண்ட் அடித்து அவமதிப்பு செய்துள்ளனர். இன்று காலையில் இதனை கண்ட பொதுமக்கள் அந்த இடத்திலேயே சாலைகள் நடுவே கற்கள் மற்றும் முட்களை போட்டு மறியல் செய்தனர். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டம் மேற்கொண்டனர்

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுபாஷ் மற்றும் கீழவளவு காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய பேச்சுவார்த்தையில், இன்று மாலைக்குள் உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்கள் என்றும், அவமதிப்பு செய்யப்பட்ட படத்திற்கு பதிலாக மாற்று படம் வரையப்படும் என தெரிவித்ததையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.Conclusion:
Last Updated : Oct 8, 2019, 3:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.