ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வேண்டி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கடந்த 2017ஆம் ஆண்டு மெரினாவில் போராட்டம் நடைபெற்றது. அதேபோல் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம், உள்ளிட்ட பல இடங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 64 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான வழக்கில் மதுரை மாவட்ட குற்றவியல் 2ஆவது நீதிமன்றத்தில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னதாக வழக்கு ஒன்றில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகிலன், பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றதையடுத்து வழக்கை வரும் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
மத்திய கால்நடை இனவிருத்தி சட்டம் 2019ஐ ரத்து செய்ய வேண்டும். அரசுகளுக்கு எதிராக போராடினால் கைது என்ற கொலைகார அரசாக இந்த அரசு செயல்படுகிறது. ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்” என்றார்.
காஞ்சி காமகோடி பீடத்துக்குச் சொந்தமான யானைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு