மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலுள்ள வாக்குச்சாவடி மையத்தில் திமுகவைச் சேர்ந்த சில வேட்பாளர்கள் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தனர். இந்நிலையில், மதுரை ஒத்தக்கடை ஊராட்சியைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன், திடீரென வாக்குமையத்தைப் பூட்டினார். இதனையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிறகு செய்தியாளரிடம் பேசிய கிருஷ்ணன், "திமுகவைச் சேர்ந்த சிலர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களிடம் அத்துமீறி பரப்பரை செய்துவருகின்றனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது. காவல் துறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகையால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வாக்கு மையத்தை பூட்டுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை" என்றார்.
பிறகு உள்ளே வந்த காவல் துறையினர் வாக்குச்சாவடிக்குள் இருந்த அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களையும் உடனடியாக வெளியேற்றினர். பின்னர் அப்பகுதி வாக்குச்சாவடிகளை ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை தந்த மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "விதிகளை மீறி வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்கு சேகரித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இதையும் படிங்க: